யுபிஐ செயலிகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை பணம் பரிமாற்றம் செய்ய முடியும். ஆனால் இந்த அதிகபட்ச வரம்பு வங்கி நிறுவனங்களைப் பொருத்து மாறுபடும்.
அந்த வகையில், கனரா வங்கியில் தினமும் 25 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே யுபிஐ செயலிகள் மூலம் பணம் பரிமாற்ற செய்ய முடியும்.
எனினும், எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் ரூபாய் வரை பணம் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கப்படும். மேலும், யுபிஐ செயலிகள் மூலம் தினமும் அதிகபட்சமாக 20 பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய முடியும்.
இதையடுத்து அடுத்த 24 மணி நேரத்திற்கு யுபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய முடியாது. அதேபோல், போன் பே மூலமாகவும் ஒரு நாளைக்கு ரூ.1லட்சம் வரை மட்டுமே பணப் பரிவர்த்தை செய்ய முடியும்.
அமேசான் பே க்கும் இதே ரூல்தான். எனினும் முதல் 24 மணி நேரத்தில் ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/