இன்றைய காலகட்டத்தில் எல்.ஐ.சி., மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களும் ஓய்வூதிய திட்டங்களை வழங்குகின்றன. இந்நிலையில், எஸ்.பி.ஐ. ரூ.1 கோடி திட்டத்துக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.70,086 வழங்குகிறது. இது மட்டுமின்றி, எஸ்பிஐ லைஃப் தனிநபர்களுக்கு ரூ.59,452 வரையிலும், கூட்டு வாழ்க்கைக்கு ரூ.58,980 வரையிலும் 7.08% வருவாய் விகிதத்தில் வழங்குகிறது.
Advertisment
இதேபோல், ரூ. 1 கோடிக்கு, ஒரு தனிநபர் ரூ.69,960 வரை 8.40% வருவாய் விகிதத்தில் எல்.ஐ.சி-யிடமிருந்து ரிட்டன் பெறலாம். அதாவது, ஆன்யூட்டி ஃபார் லைஃப் ஆஃப் பர்சேஸ் பிரைஸ் திட்டத்தின் கீழ் ரூ.69,960 வரை மாத ஓய்வூதியத்தைப் பெறலாம்.
மேலும், எல்ஐசி தனிநபர்களுக்கு ரூ.50,325 வரையிலும், கூட்டு வாழ்க்கைக்கு ரூ. 50,240 வரையிலும் 6.03% வருவாய் விகிதத்தில் வாழ்நாளுக்கான வருடாந்திரத்தின் கீழ் வழங்குகிறது.
1 கோடிக்கான வருடாந்திர விகிதங்கள் மற்றும் ஓய்வூதியத் தொகை
இது தவிர 9.24% என்ற விகிதத்தில், ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் வட்டி வழங்குகிறது.
HDFC லைஃப் இன்சூரன்ஸ் மூலம், ஒரு நபர் ரூ. 1 கோடிக்கு வாங்கிய விலைத் திட்டத்தைத் திரும்பப் பெறாமல் வாழ்க்கைக்கான வருடாந்திரத்தை வாங்குவதன் மூலம் 8.78% இல் ரூ.73,200 மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/