போஸ்ட் ஆபிஸ் டெபாசிட்: ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன்?
போஸ்ட் ஆபிஸில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்? இதன் வட்டி விகிதம் என்ன? இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
Post Office Savings Scheme | போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம் ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் ஆக முதலீடு செய்வதை குறிக்கிறது. இந்தத் திட்டத்தில், மார்ச் 31, 2024 அன்று முடிவடையும் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் சேமிப்புத் திட்டம் ஆண்டுக்கு 6.9-7.5 சதவீதமாக உள்ளது.
Advertisment
வட்டி விகிதம்
காலம்
வட்டி விகிதம் (%)
1 ஆண்டு
6.90%
2 ஆண்டு
7.00%
3 ஆண்டு
7.10%
5 ஆண்டு
7.50%
போஸ்ட் ஆபிஸில் ரூ.1 லட்சம் டைம் டெபாசிட்டில் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?
1 ஆண்டு
1 வருட கால வைப்புத்தொகையின் வட்டி விகிதம் 6.9 சதவிகிதம் ஆகும். அதில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால், முதிர்வுத் தொகை ரூ. 1.07 லட்சமாக கிடைக்கும்.
2 ஆண்டு
2 வருட கால டெபாசிட் திட்டத்தில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்தால், இரண்டு ஆண்டுகளில் ரூ.14,888 வட்டி கிடைக்கும். ஆக முதிர்வுத் தொகை ரூ.1,14,888 ஆக காணப்படும்.
3 ஆண்டு
3 வருட கால வைப்புத் திட்டத்தில் ரூ. 1 லட்சம் முதலீட்டில், 7.1 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தில், ரூ.23,508 வட்டியாகவும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த வருமானம் 1,23,508 ஆகவும் இருக்கும்.
5 ஆண்டுகள்
5 ஆண்டு கால வைப்புத் திட்டத்தில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ. 44,995 கிடைக்கும். திட்டத்தை முடிக்கும் போது மொத்த முதிர்வுத் தொகையாக ரூ.1,44,995 வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“