/tamil-ie/media/media_files/uploads/2019/01/a347.jpg)
ஆர்.டி. திட்டத்தில் கடன் பெறும் வசதியும் உள்ளது.
Recurring Deposit Account | அஞ்சலக ஆர்.டி திட்டத்தில், ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில், ஒருவர் தனிநபர் அல்லது கூட்டுக் கணக்கு வைத்திருக்கலாம்.
ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.100 இல் முதலீடு செய்யத் தொடங்கலாம். லாக்-இன் காலம் ஐந்து ஆண்டுகள் (60 மாதங்கள்) ஆகும்.
இதில் கடன் பெறும் வசதியும் உள்ளது. இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.25 ஆயிரம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
நீங்கள் ஒரு ஆர்.டி. கணக்கில் மாதாந்திர தவணையாக ரூ.25,000 டெபாசிட் செய்வதால், ஐந்து ஆண்டுகளில் ரூ.15 லட்சம் வைப்புத் தொகை செலுத்தியிருப்பீர்கள்.
முதிர்வு காலத்தில் நீங்கள் ரூ. 15 லட்சம் முதலீட்டில் ரூ. 284146 வட்டியைப் பெறுவீர்கள். இதனால், உங்களின் மொத்த முதிர்வுத் தொகை ரூ.1784146 ஆக இருக்கும்.
திட்டத்தின் பயன்கள்
வட்டி விகிதம்
உத்தரவாதம் அளிக்கப்பட்ட ரிட்டர்ன் திட்டமானது 6.7 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்படுகிறது.
அட்வான்ஸ் டெபாசிட்
ஒருவர் அக்கவுண்ட்டில் ஐந்தாண்டுகள் வரை முன்பணமாக டெபாசிட் செய்யலாம். இந்த முன்கூட்டிய வைப்புத்தொகைகளை கணக்கைத் திறக்கும் நேரத்திலோ அல்லது அதற்குப் பிறகு எந்த நேரத்திலும் செய்யலாம்.
கடன் வசதி
முதலீட்டுத் திட்டம் கடன் வசதியையும் வழங்குகிறது. ஒருவர் 12 தவணைகளை டெபாசிட் செய்து, அவரது கணக்கு ஓராண்டுக்கு தொடர்ந்த பிறகு, முதலீட்டாளர் கணக்கில் உள்ள இருப்புத் தொகையில் 50 சதவீதம் வரை வசதியைப் பெறலாம்.
முதிர்வு
தபால் அலுவலக RD-க்கான முதிர்வு காலம் கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகள் (60 மாதாந்திர வைப்புத்தொகை) ஆகும். இருப்பினும், ஒரு தபால் நிலையத்தில் விண்ணப்பம் கொடுத்து கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.