பிபிஎஃப் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. இதில் 7.1 சதவீதம் கூட்டு வட்டி வழங்கப்படும்.
உங்களால் ஒவ்வொரு மாதமும் அதிகப் பணத்தை சேமிக்க முடியாவிட்டாலோ அல்லது பணத்தை முதலீடு செய்யவில்லை என்றாலோ அதனால் நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. மாதம் ரூ. 500ல் முதலீட்டை தொடங்கலாம்.
மாதம் ரூ. 500 மட்டும் முதலீடு செய்து லட்சம் பணத்தை உருவாக்குவதற்கான பல திட்டங்கள் உள்ளன. தற்போது நாம் ஆர்.டி. மற்றும் பிபிஎஃப் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
பிபிஎஃப் (PPF)
நீங்கள் மேலும், பாதுகாப்பான முதலீடு செய்ய விரும்பினால், PPF இல் முதலீடு செய்யலாம். ரூ. 500ல் கூட முதலீட்டைத் தொடங்கக்கூடிய அஞ்சல் அலுவலகத் திட்டம் இது.
இதில் ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்வது அவசியம். இந்தத் திட்டத்தில், 7.1 சதவீத வட்டி விகிதத்தில் கூட்டு வட்டியின் பலனைப் பெறுவீர்கள்.
இந்த திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.500 டெபாசிட் செய்தால், வருடத்திற்கு ரூ.6000 டெபாசிட் செய்திருப்பீர்கள்.
பிபிஎஃப் கணக்கீட்டின்படி, 15 ஆண்டுகளில், இதன் மூலம் நீங்கள் ரூ.1,62,728 திரும்பப் பெறுவீர்கள். அதேசமயம், இந்த திட்டத்தை இன்னும் 5 ஆண்டுகள் தொடர்ந்தால், 20 ஆண்டுகளில் 2,66,332 ரூபாய் கிடைக்கும்.
தபால் அலுவலக ஆர்.டி
போஸ்ட் ஆபிஸ் ஆர்டியும் சேமிப்புக்கு ஒரு சிறந்த வழி ஆகும். அஞ்சல் அலுவலக RD 5 ஆண்டுகளுக்கு செய்யப்படுகிறது.
தற்போது இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.7 சதவீதமாக உள்ளது. 100 ரூபாயில் போஸ்ட் ஆபிஸ் ஆர்டியில் முதலீடு செய்யத் தொடங்கலாம்.
ஆனால் ஒவ்வொரு மாதமும் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 டெபாசிட் செய்தால், உங்கள் மொத்த முதலீடு ரூ.30,000 ஆக இருக்கும், அதற்கு வட்டியாக ரூ.5,681 கிடைக்கும். முதிர்ச்சியின் போது, 35,681 ரூபாய் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“