Recurring Deposit Account | Post Office Savings Scheme | பொதுமக்கள் தங்களின் பணத்தைச் சேமிக்கும் வகையில் ஊக்குவிக்க தபால் அலுவலகம் நிறைய சிறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்துகிறது.
அந்த வகையில், தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு அல்லது 5 ஆண்டு அஞ்சல் அலுவலகம் தொடர் வைப்பு கணக்கு (RD) போன்ற ஒரு திட்டத்தில். இங்கே, ஒரு முதலீட்டாளர் மாதாந்திர டெபாசிட்களைச் செய்யலாம்.
இந்தத் திட்டத்தில், ஐந்தாண்டு லாக்-இன் காலத்தின் முடிவில் முதிர்வுத் தொகையைப் பெறலாம். இது உத்தரவாதமான வருவாய்த் திட்டமாக இருப்பதால், பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களை விரும்புபவர்கள் மற்றும் சந்தையுடன் இணைக்கப்பட்ட வழிகளில் முதலீடு செய்ய விரும்பாதவர்கள் தங்கள் பணத்தை அஞ்சல் அலுவலக ஆர்.டி RD இல் முதலீடு செய்கிறார்கள்.
தபால் அலுவலகம் தவிர, ஆர்.டி திட்டமும் வங்கிகளால் நடத்தப்படுகிறது. இருப்பினும், தபால் அலுவலகம் மற்றும் வங்கிகளில் ஆர்.டி.களின் வட்டி விகிதங்கள் வேறுபடலாம்.
ஒருவர் ரூ.5,000, ரூ.10,000 மற்றும் ரூ.15,000 ஆகியவற்றை அஞ்சலக ஆர்.டி திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ.3.57 லட்சம், ரூ.7.14 லட்சம் மற்றும் ரூ.10.71 லட்சம் வரை பெறலாம். அது எப்படி என்று பார்க்கலாம்.
எவ்வளவு ரிட்டன்?
நீங்கள் ஒரு தபால் அலுவலக RD இல் ஐந்து ஆண்டுகளுக்கு (60 மாதங்கள்) மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்தால், உங்கள் மொத்த வைப்புத்தொகை ரூ. 3,00,000 ஆகவும், பெறப்பட்ட வட்டி ரூ. 56,830 ஆகவும், உங்கள் மொத்த முதிர்வுத் தொகை ரூ. 3,56,830 ஆகவும் இருக்கும்.
ஐந்தாண்டுகளுக்கு மாதம் ரூ.10,000 முதலீட்டில், உங்களின் மொத்த வைப்புத்தொகை ரூ.6,00,000 ஆகவும், பெறப்பட்ட வட்டி ரூ.1,13,659 ஆகவும், முதிர்வுத் தொகை ரூ.7,13,659 ஆகவும் இருக்கும்.
உங்கள் முதலீட்டுத் தொகையை மாதம் ரூ.15,000 ஆக உயர்த்தி, ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், அந்தக் காலக்கட்டத்தில் முதலீடு தொகை ரூ.9,00,000 ஆகவும், வட்டித் தொகை 70,492 ஆகவும் முதிர்வுத் தொகை ரூ.10,70,492 ஆகவும்ஆகவும் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“