Advertisment

செல்வ மகள் சேமிப்பு திட்டம்: மாதம் ரூ.1000 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?

இந்தத் திட்டம் ஒவ்வொரு பெண் குழந்தைகளின் பெற்றோர் தங்கள் பெண் குழந்தையின் எதிர்காலக் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக ஒரு நிதியை உருவாக்க ஊக்குவிக்கிறது.

author-image
WebDesk
New Update
Sukanya Samriddhi Yojana 2019

இந்தத் திட்டத்தில் எந்தவொரு இந்தியரும் 10 வயதுக்குட்பட்ட தங்கள் மகளுக்கு சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் முதலீடு செய்யலாம்.

Sukanya Samriddhi Yojana |  சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டம் 22 ஜனவரி 2015 அன்று, “பேட்டி பச்சாவ், பேட்டி படாவோ- பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளுக்குக் கல்வி கொடுங்கள்” என விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டம் ஒவ்வொரு பெண் குழந்தைகளின் பெற்றோர் தங்கள் பெண் குழந்தையின் எதிர்காலக் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக ஒரு நிதியை உருவாக்க ஊக்குவிக்கிறது.

Advertisment

இந்தத் திட்டத்தில் எந்தவொரு இந்தியரும் 10 வயதுக்குட்பட்ட தங்கள் மகளுக்கு சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் முதலீடு செய்யலாம். தற்போது இத்திட்டம் 7.6 சதவீத வட்டியை வழங்குகிறது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்ய விலக்கு உண்டு. திட்டத்தில் 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். 21 ஆண்டுகளில் திட்டம் முதிர்ச்சி பெறும்.

ஆகவே இந்தத் திட்டத்தில் பெண் குழந்தை பிறந்த ஆண்டில் முதலீடு செய்யத் தொடங்கினால், அதிகப்பட்ச சேமிப்பை உருவாக்க முடியும்.

ரூ.1000 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன்?

இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும். 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ. 1,80,000 ஆகவும், வட்டி, ரூ.3,29,212 ஆக இருக்கும். ஆக முதிர்ச்சியின்போது ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்து 212 கிடைக்கும்.

இதுவே மாதா மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் முதலீடு செய்தால் ரிட்டன் அப்படியே டபுள் ஆக கிடைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment