கிழிந்து போன ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்தால் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்?

கிழிந்த ரூபாய்களுக்கான சரியான மதிப்பு கிடைக்காத போதிலும் வங்கிகளில் இருந்து பெறப்பட்ட பணம் ஆர்.பி.ஐக்கு அனுப்பப்பட்டு அவை அங்கு அழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

exchange for damaged currency notes : பேருந்தில், மளிகைக் கடைகளில் கொஞ்சம் அசந்தால் ஏ.டி.எம்.களில் கூட கிழிந்து போன ரூபாய் நோட்டுகள் நம் கைகளுக்கு மாற்றப்பட்டு விடும். இதை நாம் எப்படி கைமாற்றப்போகின்றோம் என்ற எண்ணமே தூக்கத்தைக் கலைத்துவிடும். அதுவும் ரூ. 500, ரூ. 2000 என்றால் சொல்லவே வேண்டாம்.

தற்போது ஆர்.பி.ஐ .இது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கிழிந்து போன, சேதம் அடைந்த ரூபாய் நோட்டுகளுக்கு என்ன மதிப்பு கிடைக்கும் என்பதை நாம் கீழே காண இருக்கின்றோம்.

இந்த தகவல்கள் அனைத்தும் http://www.rbi.org.in இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கரன்சி தாளின் 50%க்கும் மேற்பட்ட பகுதி கிழியாமல் அல்லது சேதம் அடையாமல் இருந்தால் முழுமையான ரூபாய் மதிப்பு கிடைக்கும்.

50%க்கும் மேல் சேதம் அடைந்திருந்தால் உங்களுக்கு கிழிந்த பணத்திற்கு நிகரான மதிப்பு கிடைக்காது. இது ரூ. 20 வரையிலான ரூபாய்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ரூ. 50 மட்டும் அதற்கு மேலே என்றால்,

40%க்கும் குறைவாகவே சேதமற்ற பகுதி இருந்தால் இந்த தாள் நிராகரிக்கப்படும்

40%க்கும் மேல் 80%க்குள் சேதமற்ற பகுதி இருந்தால் பாதி மதிப்பு மட்டுமே கிடைக்கும்.

கிழிந்த ரூபாய்களுக்கான சரியான மதிப்பு கிடைக்காத போதிலும் வங்கிகளில் இருந்து பெறப்பட்ட பணம் ஆர்.பி.ஐக்கு அனுப்பப்பட்டு அவை அங்கு அழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழிந்து போன அல்லது சேதம் அடைந்த பணத்தினை நீங்கள் எந்த வங்கியில் வேண்டுமானாலும் கொடுத்து மாற்றிக் கொள்ள இயலும். இதற்கு நீங்கள் படிவங்கள் எதையும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How much value can you get in exchange for damaged currency notes

Next Story
ரூ.5000 முதலீட்டில் இவ்வளவு வருமானமா? தபால் துறை வழங்கும் 2 வாய்ப்புகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com