Advertisment

மூத்தக் குடிமக்கள் சுகாதார காப்பீடு க்ளைம் நிராகரிப்பு: தவிர்ப்பது எப்படி?

மூத்த குடிமக்கள் சுகாதார காப்பீட்டு கோரிக்கை நிராகரிப்பை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது தொடர்பாக பார்க்கலாம்.

author-image
WebDesk
Jun 11, 2023 19:01 IST
How senior citizens can avoid health insurance claim rejection

பாலிசிதாரர் க்ளைம் செட்டில்மென்ட்டின் போது சவால்களை எதிர்கொண்டால் அனைத்தும் பூஜ்யமாகிவிடுகின்றன.

வாடிக்கையாளர்கள் காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, நிதிப் பாதுகாப்பு மற்றும் மன அமைதியைப் பெறுவது. இருப்பினும், பாலிசிதாரர் க்ளைம் செட்டில்மென்ட்டின் போது சவால்களை எதிர்கொண்டால் அனைத்தும் பூஜ்யமாகிவிடுகின்றன.

இதிலும் மூத்த குடிமக்கள் விவகாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வருமான இழப்பு, சேமிப்பு அல்லது ஓய்வூதியத்தை சார்ந்து இருத்தல் என அவர்களுக்கு காப்பீட்டு இன்றியமையாததாக உள்ளது.

Advertisment

மேலும், மூத்த குடிமக்கள் வழக்கமாக ஒரு பிரீமியத்தை செலுத்துகிறார்கள், இது அவர்களின் 30 வயதிற்குட்பட்ட ஒருவரை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகமாகும்.

குறிப்பாக, சுகாதாரப் பிரிவில், அவர்கள் வழக்கமாக மருத்துவச் செலவுகள், நீண்ட காலம் மருத்துவமனையில் தங்குவது மற்றும் மருந்துகள் மற்றும் மருத்துவர் ஆலோசனைகளுக்கு அதிகச் செலவுகள் செய்வது என அவர்களது கவரேஜில் அடங்கும்.

ஆகவே காப்பீடு முகவர்கள் கவனமாக மதிப்பீடு செய்து, அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படாமல் இருக்க, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில், கடந்தகால மருத்துவ சீட், குடும்ப மருத்துவ பிரச்னைகள், முக்கிய சொத்துக்களின் விவரங்கள், முக்கியமான பில்கள், காப்பீட்டு அட்டைகளின் நகல் போன்ற அனைத்துத் தேவையான தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து கொள்கை விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் புரிந்து கொள்ளுதல் அவசியமாகும். ஏனெனில் காப்பீட்டுக் கொள்கை ஆவணங்கள் பொதுவாக நீளமாகவும் விரிவாகவும் இருக்கும். இளைஞர்கள் கூட விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மேலோட்டமாகப் படித்து தேர்வு செய்கிறார்கள்.

காப்பீட்டு வழங்குநர்கள் சில மருத்துவ நிலைமைகள் மற்றும் அவற்றின் சிகிச்சைகளுக்காக காத்திருக்கும் காலம் உள்ளது; மற்றும் மூத்த குடிமக்கள் காத்திருப்பு காலத்தின் காலம் குறித்து அறிந்திருக்க வேண்டும். புதுப்பித்தல் பாலிசிகளையும் அவர்கள் பகுப்பாய்வு செய்ய வேண்டும், இதனால் புதுப்பித்தல் காலத்திற்குப் பிறகும் காப்பீட்டுத் தொகை செல்லுபடியாகும்.

மூத்த குடிமக்கள் காப்பீட்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர் குறைதீர் அமைப்பு மற்றும் அதன் செயல்திறன் குறித்து சில ஆராய்ச்சிகளை மேற்கொள்வது மற்றும் அவர்களின் எதிர்கால அனுபவத்தை மதிப்பிடுவதற்கு மதிப்புரைகளைப் படிப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Insurance
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment