Activate New SBI ATM or Debit Card for Online Transactions : இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும் எஸ்.பி.ஐ.. பல தரப்பட்ட மக்களுக்கு வங்கி சேவைகளை வழங்கி வரும் எஸ்.பி.ஐ. வங்கியின் மிகப்பெரிய பலமாக இருப்பது அவர்களின் வாடிக்கையாளார்கள் தான். அவர்களுக்கான சிறந்த டெபிட் கார்ட் சேவைகளை வழங்க ஒரு போதும் எஸ்.பி.ஐ. தவறுவதே இல்லை. இந்த டெபிட் கார்டை வைத்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை ஏ.டி.எம். மையங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் ரீட்டெய்ல் ஷாப்களில் கிரெடிட் கார்டுகளை வைத்து பணம் பெற்றுக் கொள்ளவும் இயலும்.
மிக சமீபத்தில் தான் வாடிக்கையாளர்களுக்கு க்ரீன் பின்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது எஸ்.பி.ஐ. வங்கி. இந்த செய்தியில் எவ்வாறு கிரெடிட் கார்டுகளை ஆக்டிவேட் செய்வது என்பதை காண உள்ளோம்.
இண்டெர்நெட் பேங்கிங் மூலம் ஆக்டிவேட் செய்வது எப்படி?
உங்களின் யூசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை பயன்படுத்தி எஸ்.பி.ஐ. இண்டர்நெட் பேங்கிங் இணையத்தில் லாக் இன் செய்யவும்.
அதில் E- services என்ற ஆப்சனிற்கு சென்று ஏ.டி.எம். அட்டை சேவைகளை தேர்வு செய்யவும். பிறகு உங்களுக்கு ஏ.டி.எம். பின் ஜெனெரேஷன் என்ற ஆப்சனைக் காட்டும் அதனை க்ளிக் செய்யவும்.
உங்களின் டெபிட் அட்டை இணைக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கை தேர்வு செய்யவும்
எந்த டெபிட் அட்டைக்கு பின் எண்ணை உருவாக்க வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும். அதே போன்று ஏற்கனவே இருக்கும் பின் எண்ணை மாற்றவும் உங்களால் இயலும்
உங்களுக்கு விருப்பமான முதல் இரண்டு எண்களை உள்ளீடாக தரவும். அடுத்த இரண்டு எண்கள் உங்களுக்கு மொபைல் எண்ணில் எஸ்.எம்.எஸ்ஸாக அனுப்பப்படும். இதனை வைத்து நீங்கள் உங்கள் பின்னை ஜெனரேட் செய்து கொள்ள இயலும்.
தற்போது உங்களின் ஏ.டி.எம். அட்டை பயன்பாட்டிற்கு தயாராகிவிட்டது.
டோல் ஃப்ரீ மூலம் எப்படி ஆக்டிவேட் செய்வது?
1800 425 3800, 1800 1122 11 என்ற எண்களுக்கு கால் செய்து உங்களின் கார்டை ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும். உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து இந்த எண்களுக்கு அழைப்புவிடவும்
பின்னை உருவாக்க 1-ஐ அழுத்தவும்
உங்களின் டெபிட் அட்டை எண்ணின் இறுதி ஐந்து இலக்க எண்களையும், உங்கள் வங்கிக் கணக்கின் இறுதி 5 இலக்க எண்களையும் உள்ளீடாக தர வேண்டும்
பிறகு உங்களுக்கு ஓ.டி.பி. ஒன்று அனுப்பப்படும்.
இரண்டு நாட்களுக்கு மட்டுமே அது வேலிடாக இருக்கும்.
அருகில் இருக்கும் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பின் எண்ணை மாற்றவும்
எஸ்.எம்.எஸ். மூலம் ஆக்டிவேட் செய்வது எப்படி?
பின் என டைப் செய்து டெபிட் அட்டையின் கடைசி நான்கு இலக்க எண்களைஉம் இடம் விட்டு உங்கள் வங்கிக் கணக்கின் இறுதி நான்கு இலக்க எண்களையும் டைப் செய்து 567676 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.
இவை இரண்டும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களின் எண்ணுக்கு ஓ.டி.பி. கிடைக்கும்.
இரண்டு நாட்களுக்கு மட்டுமே அது வேலிடாக இருக்கும்.
அருகில் இருக்கும் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பின் எண்ணை மாற்றவும்
ஏ.டி.எம். மெஷினில் ஆக்டிவேட் செய்வது எப்படி?
இது பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகவும் எளிமையான ஒன்றாகவும் அலைச்சல் குறைவானதாகவும் இருக்கும். ஏ.டி.எம். மையத்திற்கு சென்று அங்குள்ள இயந்திரத்தில் அட்டையை உள்ளிடவும்.
பின் ஜெனரேஷன் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்
11 இலக்க வங்கிக் கணக்கு எண்ணை உள்ளீடாக தரவும்
பிறகு உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை தந்து உறுதி செய்யும்
உங்களுக்கு பிறகு ஒ.டி.பி. எஸ்.எம்.எஸ், மூலம் அனுப்பப்படும்.
பிறகு மீண்டும் உங்களின் அட்டையை உள்ளே செலுத்தி பின் சேஞ்ச் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும் . பிறகு உங்களுக்கு கிடைத்த ஓ.டி.பி.யை உள்ளீடாக கொடுத்து பின் எண்ணை மாற்றிக் கொள்ள இயலும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil