/tamil-ie/media/media_files/uploads/2019/12/template-21-5.jpg)
பி.பி.எஃப் திட்டத்தில் 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
Public Provident Fund | பொது வருங்கால வைப்பு நிதி (PPF) வட்டி விகிதம் 2023-24 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 7.1 சதவீதமாக உள்ளது.
வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80C இன் படி, பி.பி.எஃப் (PPF) முதலீடுகள் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.
பி.பி.எஃப் லாக்-இன் காலம்
மேலும், பிபிஎஃப் (PPF) திட்டத்தில், வருடாந்திர வட்டி மற்றும் முதிர்வுத் தொகைகள் இரண்டும் வரி இல்லாதவை ஆகும்.
இந்தத் திட்டத்தில் குறைந்தப்பட்சம் ரூ.1000 திட்டத்தில் இருந்து முதலீடு செய்யலாம். திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
உங்கள் PPF கணக்கிற்கு 15 ஆண்டுகள் லாக்-இன் கால அவகாசம் இருந்தாலும், மருத்துவ அவசரம் அல்லது வீடு வாங்குதல் போன்ற அவசரகாலப் பயன்பாட்டிற்கு நீங்கள் பணத்தை எடுக்கலாம்.
பி.பி.எஃப் (PPF) கணக்கு செயலிழக்குமா?
பி.பி.எஃப் கணக்கை சரியாக நிர்வகிக்க இல்லையென்றால் அவை செயல் இழக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் திட்டத்தில் மற்ற பலன்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
பி.பி.எஃப் கணக்கை மீட்பது எப்படி?
இதில் பி.பி.எஃப் கணக்கை மீட்பது தொடர்பான விவரங்கள் உள்ளன.
- முதலில், நீங்கள் உங்கள் பி.பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது தபால் அலுவலக கிளைக்கு கோரிக்கை கடிதம் எழுத வேண்டும்.
- அதன் பிறகு, உங்கள் கணக்கு செயலிழந்த ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ.500 மற்றும் நடப்பு நிதியாண்டில் ரூ.500 டெபாசிட் செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு செயலற்ற ஆண்டிற்கும் அபராதமாக ரூ.50 செலுத்த வேண்டும். இந்த பணம் அனைத்தும் உங்கள் வங்கிக் கணக்கில் அல்லது விண்ணப்பத்துடன் அஞ்சல் அலுவலக கிளையில் செய்யப்பட வேண்டும்.
- விண்ணப்பம் அல்லது பணம் செலுத்தும் செயல்முறை முடிந்ததும், வங்கி அல்லது தபால் அலுவலகக் கிளை அதை மதிப்பாய்வு செய்கிறது. லாக்-இன் காலம் 15 ஆண்டுகள் முடிந்துவிட்டால், கணக்கை மீண்டும் செயல்படுத்த முடியாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.