Loan Scheme | பி.எம் முத்ரா யோஜனாவில் முத்ரா ஷிஷு, முத்ரா கிஷோர் அல்லது முத்ரா தருண் என மூன்று பிரிவுகளின் கீழ் கடன் கிடைக்கிறது.
இந்தப் பிரிவுகள் பயனாளிகளின் மைக்ரோ யூனிட் அல்லது நிறுவனத்தின் வளர்ச்சி/மேம்பாடு மற்றும் நிதி தேவைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
பிஎம் முத்ரா யோஜனா:
நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினாலோ, அல்லது தொழிலுக்கு பணப் பற்றாக்குறை இருந்தாலோ மத்திய அரசின் பிஎம் முத்ரா யோஜனா திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தின் கீழ், கார்ப்பரேட் அல்லாத, விவசாயம் அல்லாத சிறு அல்லது குறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன்கள் முத்ரா கடன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தக் கடன்கள் வணிக வங்கிகள், ஆர்ஆர்பிக்கள், சிறு நிதி வங்கிகள், எம்எஃப்ஐகள் மற்றும் என்பிஎஃப்சிகளால் விநியோகிக்கப்படுகின்றன.
பிஎம் முத்ரா திட்டத்தின் கடனுக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். வாடிக்கையாளர்கள் udyamimitra.in இணையதளத்திற்குச் சென்று முத்ரா கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பிஎம் முத்ரா யோஜனாவில் 3 பிரிவுகள் உள்ளன
பிஎம் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளின்கீழ் கடன்கள் வழங்கப்படுகிறது. அதாவது முத்ரா ஷிஷு, முத்ரா கிஷோர் அல்லது முத்ரா தருண் ஆகியவை ஆகும்.
இந்தப் பிரிவுகள் பயனாளிகளின் மைக்ரோ யூனிட் அல்லது நிறுவனத்தின் வளர்ச்சி/மேம்பாடு மற்றும் நிதி தேவைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
ஷிஷு கடன் ரூ.50,000 வரையிலான கடன்களை வழங்குகிறது. இந்த பிரிவில் ஆரம்ப நிலையில் இருக்கும் தொழில்முனைவோர் அல்லது தங்கள் தொழிலைத் தொடங்க குறைவான நிதி தேவைப்படுபவர்களுக்கு இது பொருந்தும்.
அடுத்து கிஷோர் பிரிவில் ரூ.5 லட்சம் வரை கடன் கிடைக்கும். இந்தப் பிரிவில் ஏற்கனவே தங்கள் தொழிலைத் தொடங்கி நடத்திக் கொண்டிருப்பவர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த கூடுதல் பணம் தேவைப்படுவர்களுக்கு இது பொருந்தும்.
மூன்றாவது வகை தருண் கடன். இது 10 லட்சம் வரையிலான கடன்களை உள்ளடக்கியது. முத்ரா கடனில் கொடுக்கப்படும் அதிகபட்ச தொகை இதுவாகும்.
பிஎம் முத்ரா கடனுக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிப்பதற்கான படிகள் இதோ
படி 1: பிஎம் முத்ரா (PM MUDRA) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (https://www.mudra.org.in/) சென்று, உதயமித்ரா (Udyamimitra) போர்ட்டலைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 2: முத்ரா லோன் "இப்போது விண்ணப்பிக்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: இந்த விருப்பங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்: புதிய தொழில்முனைவோர், நிறுவப்பட்ட தொழில்முனைவோர் அல்லது சுயதொழில் செய்பவர், பின்னர் ஓடிபி ஐ பெற விண்ணப்பதாரரின் பெயர், மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை கொடுக்கவும்.
படி 4: பதிவு செய்தவுடன், விண்ணப்பதாரரின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தகவலை நிரப்பவும்.
படி 5: திட்ட யோசனைகள் போன்றவற்றில் உதவி தேவைப்பட்டால், ஹேண்டு ஹோல்டிங் ஏஜென்சியை தேர்வு செய்யவும். இல்லையெனில், "கடன் விண்ணப்ப மையம்" (Loan Application Centre)என்பதைக் கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.
படி 6: முத்ரா ஷிஷு, முத்ரா கிஷோர் அல்லது முத்ரா தருண் இவற்றில் உங்களுக்கு தேவையான கடனின் வகையைத் தேர்வு செய்யவும்
படி 7: விண்ணப்பதாரர் அடுத்ததாக தங்களின் உறுதியான விவரங்களையும், அவர்களின் வணிகம் சார்ந்த தொழில் வகையையும் வழங்க வேண்டும்.
படி 8: உரிமையாளர் தரவு, தற்போதைய வங்கி/கடன் வசதிகள், திட்டமிடப்பட்ட கடன் வசதிகள், எதிர்கால மதிப்பீடுகள் மற்றும் விருப்பமான கடன் வழங்குபவர்கள் போன்ற பிற தகவல்களை அளிக்கவும்.
படி 9: மேலே குறிப்பிட்டுள்ளபடி தேவையான அனைத்து ஆவணங்களை இணைக்கவும்.
படி 10: விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும், உங்கள் விண்ணப்ப எண் உருவாக்கப்படும். எதிர்கால குறிப்பு மற்றும் தேவைக்காக அந்த எண்ணை பாதுகாப்பாக குறித்துக்கொள்வது அவசியம்.
- அரசு நடத்தும் கூட்டுறவு வங்கி
- பிராந்திய துறை கிராமின் வங்கி
- மைக்ரோ ஃபைனான்ஸ் வழங்கும் நிறுவனங்கள்
- வங்கிகளைத் தவிர மற்ற நிதி நிறுவனங்கள்
வங்கிகளைத் தவிர, மேற்கண்ட கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் முத்ரா கடன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.