இலவச கேஸ் சிலிண்டர், அடுப்பு வேண்டுமா? இந்த செய்தி உங்களுக்குத் தான்

விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பிறகு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தகுதியான நபர்களுக்கு சிலிண்டர் இணைப்புகளை வழங்கும்.

Tamil news today live Tamilnadu Stalin Local body Election Weather

apply for PMUY for free LPG gas connection: கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு மற்றும் சிலிண்டர், அடுப்புகளை வழங்க கொண்டு வரப்பட்டது தான் உஜ்வாலா என்ற திட்டம். தற்போது உஜ்வாலா 2.0 என்ற திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் சிலிண்டர் இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் அடுப்பு வாங்குவதற்கு வட்டியில்லாக் கடனும் இலவச சிலிண்டரும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் சிலிண்டர்களை எப்படி பெறுவது என்பதை கீழே காணலாம்.

http://www.pmuy.gov.in என்ற வெப்சைட்டில் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அந்த படிவத்தில் பெயர், முகவரி, ஜன் தன் வங்கிக் கணக்கு விபரம், ஆதார் நம்பர் போன்ற விபரங்களைப் பதிவிட வேண்டும். பி.பி.எல் கார்டு, வங்கியில் சேமிப்புக் கணக்கு, ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவறையும் வழங்க வேண்டும்.

பெண்களே இந்த திட்டத்தின் பயனாளிகள் என்பதால் இதற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பெயரில் இதற்கு முன்பு எல்.பி.ஜி. கணக்கு ஏதும் இருக்க கூடாது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பிறகு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தகுதியான நபர்களுக்கு சிலிண்டர் இணைப்புகளை வழங்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How to apply for pmuy for free lpg gas connection

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com