SBI Doorstep Banking Services: நேரடியாக வங்கிகளுக்கு சென்று தங்களின் வங்கி சேவைகளை மேற்கொள்ளும் சூழலை தவிர்க்க தற்போது எஸ்.பி.ஐ வங்கி நேரடி வங்கி சேவைகளை வீடுகளுக்கே வந்து தருகிறது. 18001037188/18001213721 ஆகிய டோல் ஃப்ரீ எண்களின் மூலமும், psbdsb.in என்ற இணையத்தின் மூலமாக இந்த சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள இயலும். கொரோனா காலகட்டத்தில் இப்படியான சேவைகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது வங்கி. இந்த திட்டம் குறித்து நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் கீழே
டோர் ஸ்டெப் சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் ஒரு முறை பதிவு செய்தாலே போதும்
தங்களின் ஒரு நாளுக்கான ரூ. 20 ஆயிரம் டெபாசிட் தொகை அல்லது வித்ட்ரா தொகையை இந்த சேவை மூலம் வங்கிகளுக்கு அனுப்பவோ, வங்கிகளில் இருந்து பெற்றுக் கொள்ளவோ இயலும்.
தற்போது இந்த சேவைகளுக்காக எஸ்.பி.ஐ. ரூ. 60+ ஜி.எஸ்.டி கட்டணத்தை நிதி சாரா பரிவர்த்தனைகளுக்கும், ரூ. 100+ஜி.எஸ்.டியை நிதி சார் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணமாக பெறுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள இயலும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 1800 1111 03 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்கு அழைத்து உங்களின் தேவையை விவரிக்கவும்.
விரைவில் இந்த சேவையை யோனா ஆப்கள் மற்றும் இண்டெர்நெட் பேங்கிங் மூலமும் ஒருவர் பெற்றுக் கொள்ள இயலும் என்று எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது.
தங்களின் வங்கிக் கிளைகளில் இருந்து 5 கி.மீ சுற்றளவில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சேவைகள் வழங்கப்படுகிறது.
நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்த பிறகு வங்கி ஏஜெண்ட் உங்களுக்கான சேவையை உங்கள் வீட்டில் வந்து வழங்குவார். அவருக்கு நீங்கள் எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஒரு அழைப்பில் இரண்டு விதமான சேவைகளை மட்டுமே ஒருவர் பெற்றுக் கொள்ள இயலும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பிக் அப் சேவைகள் என்னென்ன?
செக்புக், ட்ராஃப்ட்கள்
புதிய செக்புக்குகள்
ஐ.டி. சலான்கள்
கே.ஒய்.சி ஆவணங்கள்
டெபாசிட் பணம் ஆகியவற்றை பிக் அப் சேவைகள் மூலம் நீங்கள் வங்கிகளுக்கு அனுப்பி வைக்க இயலும்.
டெலிவரி சேவைகள் என்னென்ன?
ட்ராஃப்ட், பே ஆர்டர்கள்
டெர்ம் டெபாசிட் ரசீதுகள்
ஸ்டேட்மெண்ட்டுகள்
டிடிஎஸ் சான்று
கிஃப்ட் கார்ட்
வங்கிகளில் இருந்து பெற வேண்டிய பணம் போன்றவற்றை நீங்கள் டெலிவரி சேவைகள் மூலம் பெற்றுக் கொள்ள இயலும்
இதர சேவைகள்
பணம் எடுத்தல்
ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கான டிஜிட்டல் சேவைகள் போன்றவை இந்த சேவைகள் மூலம் பெற்றுக் கொள்ள இயலும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil