Advertisment

வெறும் 4% வட்டியில் மத்திய அரசு கடன்: SBI-யில் கிசான் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி?

கிசான் கிரெடிட் கார்டு மூலம் குறைந்த வட்டியில் விவசாயிகள் கடன் பெறலாம். எஸ்பிஐ வங்கியில் கிசான் கடன் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வெறும் 4% வட்டியில் மத்திய அரசு கடன்: SBI-யில் கிசான் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி?

How to apply kisan credit card in SBI simple steps: விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு மூலம் எளிதாக ரூ.3 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் பெறலாம். இந்த அருமையான கடன் ஆஃபர் பற்றியும், எஸ்பிஐ வங்கியில் கிசான் கிரெடிட் கார்டு எப்படி பெறுவது என்பது பற்றியும் இப்போது பார்ப்போம்.

Advertisment

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வகையில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு சிறப்பு கடன் அட்டை வழங்கப்பட்டு, அதன் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்குவதற்காக 1998இல் தொடங்கப்பட்டது. இது தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் (NABARD) உருவாக்கப்பட்டது. இது விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடனை வழங்குகிறது. அதாவது சரியாக தவணைத் தொகையை மாத மாதம் செலுத்தி வந்தால், 7% த்திற்கு பதிலாக, வெறும் 4% என குறைந்த விகிதத்தில் வட்டி விதிக்கப்படும்.

மேலும், கிசான் கிரெடிட் கார்டு திட்டம், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்துடன் (PM Kisan) இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 4% வட்டி விகிதத்தில் கிசான் கடன் அட்டையில் இருந்து ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். அதே நேரத்தில், PM Kisan பயனாளிகள் இந்த கடன் அட்டைக்கு விண்ணப்பிப்பதும் எளிதாகிவிட்டது. இந்த சேவைகளை வங்கிகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனிடையே, பாரத ஸ்டேட் வங்கி இந்த திட்டத்திற்கு கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.

கிசான் கடன் அட்டையின் நன்மைகள்

விவசாயிகள் விவசாய நோக்கங்களுக்காக வங்கிகளில் மிகக் குறைந்த வட்டியில் கடன் பெறுகின்றனர். இந்த கடன் கிசான் கிரெடிட் கார்டு மூலம் மட்டுமே வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உத்தரவாதமின்றி ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதே சமயம் ரூ.5-3 லட்சம் வரையிலான குறுகிய கால கடன்கள் 4% வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன. இந்த கடனுக்கு அரசு 2% மானியமும் வழங்குகிறது. மேலும், கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால், 3% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த கடன் வெறும் 4% என்ற குறைந்த வட்டி விகிதத்தில் விவசாயிகளுக்குக் கிடைக்கும். ஆனால் கடனை திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், இந்த கடனுக்கான வட்டி விகிதம் 7% ஆக உயரும் என்பது உங்கள் நினைவில் இருக்கட்டும்.

இதையும் படியுங்கள்: ஒரே வாரத்தில் மொத்த பணம் ரிட்டன்… போஸ்ட் ஆபீஸ்-ஐ விட எஸ்.பி.ஐ FD ஏன் பெஸ்ட் தெரியுமா?

எஸ்பிஐ வங்கியில் கிசான் கடன் அட்டைக்காக விண்ணப்பிப்பது எப்படி? (SBI KISAN CREDIT CARD)

எஸ்பிஐ கிசான் கடன் அட்டை பெற, உங்களுக்கு எஸ்பிஐயில் (SBI) கணக்கு இருக்க வேண்டும். உங்களின் வங்கிக் கிளைக்குச் சென்று கிசான் கடன் அட்டைக்காக விண்ணப்பிக்கலாம். இது தவிர, வீட்டிலிருந்தபடியே உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் பாரத ஸ்டேட் வங்கியின் பிரத்யேக செயலியான YONO ஐ பதிவிறக்கம் செய்து அதில் உள்நுழைந்து, கடன் அட்டைக்காக விண்ணப்பிக்கலாம்.

  1. எஸ்பிஐ யோனோ (SBI YONO) செயலியைப் பதிவிறக்கம் செய்து, ஸ்மார்ட்போனில் நிறுவ வேண்டும் அல்லது https://sbi.co.in/web/agri-rural/agriculture-banking/crop-loan/kisan-credit-card என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்
  2. உங்கள் லாகின் தகவல்களை கொடுத்து உள்நுழையவும்
  3. பின்னர் YONO விவசாயம் என்ற பக்கத்திற்குச் செல்லவும்
  4. அதன் பிறகு Khata என்பதைத் தேர்வு செய்யவும்
  5. தொடர்ந்து கிசான் கடன் அட்டை மதிப்பாய்வு (KCC Review) பகுதிக்குச் செல்லவும்
  6. இப்போது விண்ணப்பிக்கவும் (Apply) என்பதைக் கிளிக் செய்யவும் உங்கள் கோரிக்கையை பூர்த்து செய்யவும்

இந்த விண்ணப்ப முறைக்குப் பின், உங்கள் கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, வங்கியில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலர் உங்களை தொடர்பு கொண்டு தகவல்களை உறுதிபடுத்திக் கொள்வார். அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துவிட்டால், குறைந்தது 15 நாள்களுக்குள் உங்கள் கையில் கிசான் கடன் அட்டை கிடைத்துவிடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Sbi Kisan Credit Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment