ஏடிஎம் கார்டுக்கு ஆபத்தா? ஆன்லைனில் பிளாக் செய்யும் முறையை தெரிஞ்சுக்கோங்க!

உங்கள் டெபிட்/ஏடிஎம் கார்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை நடைபெறுவதை கண்டறிந்தால், மொபைல் செயலி மூலமாகவோ அல்லது வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ அல்லது நெட் பேங்கிங் மூலமாகவோ கார்டை பிளாக் செய்யும் வழிமுறைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள்.

இன்றைய அவசர உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது அதிகமாக புழகத்தில் உள்ளது.கார்டு இருந்தால் போதும் அல்லது ஃபோன் இருந்தாலே போதும் ஈஸியாக பணத்தை செலுத்திவிடலாம்.

இப்படி டெபிட் கார்டுகளின் தேவை அதிகள் இருப்பதால் அவை தொலைந்து போகவும் வாய்ப்பு உண்டு. அதனால் அதை கவனமாக கையாள்வது மிக மிக முக்கியம். அறியாமலோ தவறுதலாகவோ டெபிட் கார்டு தொலைந்து போனால், உடனடியாக பிளாக் செய்து மோசடி கும்பலிடமிருந்து தற்காத்துகொள்ள வேண்டும்.

ஏனென்றால், வங்கிகள் வழங்கும் டெபிட் கார்டுகள் பொதுவாக ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கப் பயன்படுத்தப்பட்டாலும், கார்டின் விவரங்களை பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டோ அல்லது மொபைல் செயலி மூலமாகவே பிளாக் செய்யலாம்

எஸ்பிஐ டெபிட் கார்ட் பிளாக்

 • முதலில் எஸ்பிஐ நெட் பேங்கிங் லாகின் செய்ய வேண்டும்
 • அதில் ‘e-Services’டேபில் ‘ATM Card Services ஆப்ஷனுக்கு சென்று Block ATM Card’விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
 • பின்னர், அதில் பிளாக் செய்ய வேண்டிய கார்டின் கணக்கை கிளிக் செய்ய வேண்டும்.
 • அடுத்த திரையில், ஆக்டிவ் மற்றும் பிளாக் செய்யப்பட்ட கார்டுகளின் முதல் 4 நம்பர் மற்றும் கடைசி 4 நம்பர் திரையில் தோன்றும்.
 • பிளாக்செய்ய வேண்டிய கார்டை தேர்ந்தெடுத்து, விவரங்களை சரிபார்த்துவிட்டு, சப்மிட் கொடுக்க வேண்டும்.
 • தொடர்ந்து, சரிபார்ப்பு முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒன்று, பதிவு செய்த எண்ணுக்கு ஓடிபி மெசேஜ் அல்லது கணக்கின் கடவுச்சொல்
 • பின்னர், ஓடிபி நம்பர் அல்லது கடவுச்சொல்லை பதிவிட்டு,கன்ஃபார்ம் கொடுக்க வேண்டும்
 • செயல்முறை முடிந்து, சக்சஸ் மெசேஜ் திரையில் தோன்றும். எதிர்கால தகவல்களை அறிய, அதனை நோட் செய்துகொள்ளுங்கள்.

ஐசிஐசிஐ ஏடிஎம் கார்ட் பிளாக் செய்யும் முறை

 • முதலில் வங்கியின் நெட் பேங்கிங் லாகின் செய்ய வேண்டும்
 • அதில், my accounts ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்
 • தொடர்ந்து, கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்
 • பின்னர், service requests ஆப்ஷனில் ‘ATM/Debit card related’கிளிக் செய்ய வேண்டும்.
 • அடுத்து, ஏடிஎம் கார்ட் பிளாக் செய்துவிடலாம்.

குறிப்பு: ஐசிஐசிஐ வங்கியில் ஒருவர் தங்கள் டெபிட்/ஏடிஎம் கார்டைத் தற்காலிகமாக பிளாக் செய்துவைக்க முடியும். பின்னர் நேட் பேங்கிங் லாகின் மூலம் தடையை நீக்கலாம்.

கார்டு நிரந்தரமாக பிளாக் செய்யப்படும் பட்சத்தில், புதிய கார்டு வங்கி வழங்குகிறது. பிளாக் செய்யப்பட்ட கார்டு உங்களிடம் கைவசம் இருக்கும் பட்சத்தில், அதனை உடைத்துவிடுவது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே, உங்கள் டெபிட்/ஏடிஎம் கார்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை நடைபெறுவதை பார்த்தால், மொபைல் செயலி மூலமாகவோ அல்லது வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ அல்லது நெட் பேங்கிங் மூலமாகவோ கார்டைத் தடுக்க வழிமுறைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How to block atm debit cards online

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com