கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல திட்டங்களை எஸ்பிஐ அறிமுகம் செய்து வருகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் டெபிட் கார்டு ரொம்பவே முக்கியமானது. கொரோனா காலத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகளை நம்பியே இருக்கிறோம். டெபிட் கார்டு தொலைந்துவிட்டால் உடனடியாக கார்ட் பிளாக் செய்வது அவசியமான ஒன்று. இந்நிலையில் ஏடிஎம் கார்ட்டை பிளாக் செய்வது, புதிய ஏடிஎம் கார்டு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க நல்ல திட்டத்தை எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு செல்லாமல் பழைய ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்து புதிய கார்டு பெறலாம். எஸ்பிஐ கார்ட்டை பிளாக் செய்வதற்கு 1800112211 & 18004253800 என்ற கட்டணமில்லா தொலைபேசிய எண்ணை அழைக்கலாம். அதேபோல் புதிய கார்டை பெறுவதற்கும் தொடர்பு கொள்ளலாம். இதனை எஸ்பிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் வெளியே செல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
நெட் பேங்கிங் வழியாக எஸ்பிஐ கார்ட்டை பிளாக் செய்வது எப்படி?
onlinesbi.com என்ற எஸ்பிஐ இணையதளத்திற்கு சென்று username மற்றும் passwordஐ கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.
அதன்பிறகு e-services என்ற ஆப்ஷனின் கீழ் ATM card services என்பதை கிளிக் செய்து, அதில் Block ATM என்பதை கிளிக் செய்யவும்.
அதன்பிறகு எந்த அக்கவுண்டுடைய ஏடிஎம் கார்டு என்பதை கிளிக் செய்யவும்
அதன் பின்னர் பிளாக் என்பதை கிளிக் செய்து, எதற்காக பிளாக் செய்கிறீர்கள் என்பதையும் பதிவு செய்யவும்.
ஒரு முறைக்கு இருமுறை விவரங்களை சரிபார்த்து பின்னர் Submit கொடுக்கவும்.
இதனை உறுதிபடுத்த உங்களது OTP அல்லது Profile password கொடுத்து confirm என்பதை கிளிக் செய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil