IRCTC: கடைசி நிமிடத்தில் பயணம் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, தட்கல் டிக்கெட் மிகப்பெரும் உதவியாக இருக்கும்.
அவசர தேவைக்கும் இறுதி நிமிட பயணத்திற்கும் இந்திய ரயில்வேயின் irctc.co.in தளத்தில் இந்தத் தட்கல் டிக்கெட்டைப் பதிவு செய்துக் கொள்ளலாம்.
தட்கல் முன்பதிவு நேரம்
ஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாக, இந்த டிக்கெட்டை பதிவு செய்துக் கொள்ளலாம். ஏ.சி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், நான் ஏ.சி வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் முன்பதிவு தொடங்கும்.
IRCTC-யில் எப்படி முன்பதிவு செய்வது?
உங்களது லாக் இன் ஐடி-யை வைத்து irctc.co.in தளத்தில் நுழையவும்.
’book your ticket' என்பதை க்ளிக் செய்து, எங்கிருந்து எங்கே செல்ல வேண்டும், எந்த தேதியில் செல்ல வேண்டும் என்பதை குறிப்பிடவும்.
ஒருவேளை தேதி சரியாக முடிவு செய்யப்படவில்லை எனில், ’Flexible with Date' என்பதை க்ளிக் செய்துக் கொள்ளவும்.
மாற்றுத்திறனாளிகள் ’DIVYAANG' ஆப்ஷனை க்ளிக் செய்து, சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளவும்.
இப்போது நேரம் உள்ளிட்ட தகவல்களுடன், ரயில்களின் பட்டியல் திரையில் வரும்.
ரயில் மற்றும் உங்களுக்கு உகந்த வகுப்புகளை செலக்ட் செய்துக் கொள்ளவும்.
டிரெயின் லிஸ்ட்டுக்கு வலது புறம் கோட்டா இருக்கும்.
அதில் தட்கல் என்பதை க்ளிக் செய்யவும்.
சீட் விபரம் மற்றும் கட்டணத்தைத் தெரிந்துக் கொள்ள check availability & fare என்பதை அழுத்தவும்.
‘Book Now’ என்பதை அழுத்தி, தட்கல் டிக்கெட்டை புக் செய்யவும். ஒரு பி.என்.ஆருக்கு 4 டிக்கெட் வரை புக் செய்துக் கொள்ளலாம்.
பின்னர் பயணியின் பெயர் விபரம் உள்ளிட்டவைகளை குறிப்பிடவும்.
சீனியர் சிட்டிசன்களுக்கான சலுகைகளும் தட்கலில் உண்டு.
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, வேலட் என பல்வேறு முறைகளில் டிக்கெட் கட்டணத்தை செலுத்தலாம்.
பணம் செலுத்தி உறுதியானதும், பதிவு செய்யப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு அதற்கான எஸ்.எம்.எஸ் வரும்.
அதோடு, மெயில் ஐ.டிக்கும் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும்.
இறுதியாக அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.