இந்தியா முழுவதும் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ரயிலில் பயணித்து வருகின்றனர். இதில் பயணக் கட்டணம் மிகவும் குறைவு என்பதோடு, உணவு, கழிப்பறை போன்ற வசதிகள் பொதுமக்களுக்கு ஏதுவாக உள்ளன.
முன்பு போல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை இல்லை. உட்கார்ந்த இடத்திலே ஸ்மார்ட்போனில் ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளம் வாயிலாக எளிதாக புக் செய்துவிடலாம்.
டிக்கெட் புக்கிங் உட்பட அனைத்து விதமான ரயில்வே சேவைகளையும், IRCTC Rail Connect செயலியில் மக்கள் அணுகலாம். டிக்கெட் புக்கிங் செய்திட ஐஆர்சிடிசி செயலியை முதலில் பிளே ஸ்டாரில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
நீங்கள் முதல் முறை டிக்கெட் முன்பதிவு செய்கிறீர்கள் என்றால், ரெஜிஸ்டர் செய்வது கட்டாயம் ஆகும்.
Step 1: முதலில் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் irctc.co.in/mobile செல்ல வேண்டும் அல்லது ஐஆர்சிடிசி செயலி டவுன்லோடு செய்ய வேண்டும்
Step 2: லாகினுக்கு தேவையான ஐடி, பாஸ்வேர்டு பதிவிட வேண்டும். இல்லையெனில், புதிதாக அக்கவுண்ட் தயாரிக்க வேண்டும்
step 3: முகப்பு பக்கத்தில், Train Ticketing section-இல் ‘Plan My Bookings’ கிளிக் செய்ய வேண்டும்.
Step 4: அடுத்ததாக, பயண தேதி, ரயில், போர்டிங் பாயிண்ட் ஆகியவற்றை பதிவிட்டு, Search Train கொடுக்க வேண்டும்.
Step 5: திரையில் ரயில்களின் விவரங்கள் தோன்றும். அதில், பயணிக்க விரும்பும் ரயிலை தெர்ந்தெடுத்து, பயணிகளின் விவரங்களை பதிவிட வேண்டும்.
Step 6: அடுத்ததாக, ‘Review Journey Details’ கிளிக் செய்து, பயண விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை சரிப்பார்த்து கொள்ள வேண்டும்.
Step 7: இறுதியாக, ‘Proceed to Pay’ கொடுக்க வேண்டும். உங்கள் மொபைல் வாலட், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, Paytm, UPI அல்லது நெட் பேங்கிங் மூலம் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தலாம்.
டிக்கெட் புக்கிங் பிராசஸ் முடிவடைந்ததும், பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு பிஎஸ்ஆர் (PNR), ரயில் எண், பெட்டி எண் உட்பட அனைத்து விவரங்களும் மெசேஜாக அனுப்பப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil