/indian-express-tamil/media/media_files/2025/06/08/vGj1hLhWehIoBNVe5RLm.jpg)
உங்கள் கிரெடிட் ஸ்கோரை உருவாக்குவதற்கு சிறிது காலம் ஆகலாம். ஆனால், சரியான நிதி நிர்வாகத்தை கடைபிடித்தால், சில மாதங்களுக்குள் உங்கள் ஸ்கோரை 100 புள்ளிகள் உயர்த்த முடியும். வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் பெறுவது, சிறந்த வட்டி விகிதங்களை பெறுவது அல்லது உங்கள் ஒட்டுமொத்த நிதி சுதந்திரத்தை அதிகரிப்பது எதுவாக இருந்தாலும், நல்ல கிரெடிட் ஸ்கோர் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளை திறக்கும். இதை படிப்படியாக எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
உங்கள் கிரெடிட் அறிக்கையை மதிப்பாய்வு செய்யவும்:
முதலாவதாக உங்களுடைய கிரெடிட் அறிக்கையை மதிப்பாய்வு செய்ய வேண்டும். நீங்கள் ஒருபோதும் திறக்காத கணக்குகள் அல்லது தாமதமாக செலுத்தப்பட்டதாக இருக்கும் கட்டணங்கள் போன்ற பிழைகளுக்கு அறிக்கையை கவனமாக சரிபார்க்கவும். பிழைகள் நீக்கப்பட்டால், உங்கள் ஸ்கோரில் விரைவான மேம்பாடுகளை ஏற்படுத்தலாம். உங்கள் தற்போதைய ஸ்கோர் என்ன என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் காலப்போக்கில் முன்னேற்றத்தை கண்காணிக்க முடியும்.
கட்டணங்களை சரியான நேரத்தில் செலுத்துவதற்கு முன்னுரிமை அளியுங்கள்:
உங்கள் கிரெடிட் ஸ்கோரில் மிகப்பெரிய பங்களிப்பு, உங்களுடைய கட்டண வரலாறு தான். இது ஏறத்தாழ 35% ஆகும். ஒரு கட்டண தேதியை தவறவிடுவது கூட உங்கள் ஸ்கோரை பாதிக்கலாம். எனவே, ஒவ்வொரு பில்லையும் சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கடன் பயன்பாட்டு விகிதத்தை (Credit Utilisation Ratio) குறைக்கவும்:
உங்கள் கிரெடிட் ஸ்கோரில் மிக முக்கியமான தாக்கங்களில் ஒன்று, கிடைக்கக் கூடிய கிரெடிட்டில் நீங்கள் பயன்படுத்தும் சதவீதம். இது உங்கள் கடன் பயன்பாட்டு விகிதம் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலான வல்லுநர்கள் இந்த சதவீதத்தை 30% க்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அந்த வகையில் சரியாக விகிதத்தை பின்பற்றுவது கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த உதவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.