கிரெடிட் ஸ்கோர் பிரச்னையா? 30 நாட்களில் 30 பாயிண்ட்ஸ் அதிகரிப்பது எப்படி? 5 சூப்பர் டிப்ஸ்!

கிரெடிட் ஸ்கோர் என்பது நமது நிதி நடவடிக்கையின் பிரதிபலிப்பு. கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவது, சிறந்த கடன் அனுமதிகளைப் பெற உதவும். 30 நாட்களில் 30 புள்ளிகள் வரை உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க முடியும்.

கிரெடிட் ஸ்கோர் என்பது நமது நிதி நடவடிக்கையின் பிரதிபலிப்பு. கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவது, சிறந்த கடன் அனுமதிகளைப் பெற உதவும். 30 நாட்களில் 30 புள்ளிகள் வரை உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க முடியும்.

author-image
WebDesk
New Update
Credit Score Boosting

கிரெடிட் ஸ்கோர் பிரச்னையா? 30 நாட்களில் 30 பாயிண்ட்ஸ் அதிகரிப்பது எப்படி? 5 சூப்பர் டிப்ஸ்!

சிறந்த கடன் ஒப்புதல்கள், கிரெடிட் கார்டு அனுமதிகளுக்கு கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவது அவசியம். வலுவான கிரெடிட் ஸ்கோர், கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு உங்கள் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. முறையான பழக்கவழக்கங்கள், திறமையான நிதி திட்டமிடலுடன், 30 நாட்களில் 30 பாயிண்ட்ஸ் வரை உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பது சாத்தியமே.

Advertisment

கிரெடிட் ஸ்கோர் என்பது நமது நிதி நடவடிக்கையின் பிரதிபலிப்பு. பில்களை சரியான நேரத்தில் செலுத்துவது, கடன் பயன்பாட்டை குறைப்பது மற்றும் ஸ்டேட்மெண்டில் உள்ள பிழைகளைச் சரிசெய்வது போன்ற சரியான நடவடிக்கைகள் மூலம் 30 நாட்களில் 30 பாயிண்ட்ஸ் அதிகரிப்பது சாத்தியம். சிறிய, நிலையான நடவடிக்கைகள் பெரிய நிதி மாற்றங்களை உருவாக்கும்,” என்று தெரிவித்தார்.

30 நாட்களில் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க 5 முக்கிய வழிகள்:

பில்களை சரியான நேரத்தில் செலுத்துங்கள்: கடன் ஹிஸ்டிரி என்பது கிரெடிட் ஸ்கோரை நிர்ணயிக்கும் காரணியாகும். தனிநபர் கடன்களுக்கு ஈஎம்ஐ, கிரெடிட் கார்டு பில்கள், பிற நிலுவைத் தொகைகளை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது ஒரு நேர்மறையான வரலாற்றை உருவாக்குகிறது. பணம் செலுத்துவதை ஆட்டோமெட்டிக் அல்லது ரிமைண்டர் அமைப்பது, எந்தக் காலக்கெடுவும் தவறாமல் பார்த்துக்கொள்ள உதவும்.

கடன் பயன்பாட்டைக் குறைத்து வையுங்கள்: நீங்கள் கிரெடிட்டை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த விரும்பினால், உங்கள் கடன் பயன்பாட்டு விகிதத்தை (credit utilisation ratio) 30% க்குக் கீழே பராமரிப்பதே உங்கள் இலக்காக இருக்க வேண்டும். உதாரணமாக ரூ.2 லட்சம் கடன் வரம்பு உள்ளவர்கள் ரூ.60,000-க்கு மேல் பயன்படுத்தக்கூடாது. இதன்மூலம், உங்கள் கடன் பயன்பாட்டு விகிதம் எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்கும். பில் அறிக்கை வெளியாகும் தேதிக்கு முன்பே தொகையைச் செலுத்துவதன் மூலம், பயன்பாட்டைக் குறைத்து, உங்கள் கிரெடிட் சுயவிவரத்தை விரைவாக மேம்படுத்தலாம்.

Advertisment
Advertisements

பல்வேறு கடன் வகைகளை நிர்வகியுங்கள்: கிரெடிட் கார்டுகள், வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள், பிணைக் கடன்கள் (secured loans) போன்ற பல்வேறு வகையான கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்துவது, கடனைப் பொறுப்புடன் நிர்வகிக்கும் திறனைக் காட்டுகிறது. சிறிய அளவிலான கடன் பயன்பாடு கூட காலப்போக்கில் ஒரு வலுவான கிரெடிட் சுயவிவரத்தை உருவாக்க உதவுகிறது.

கிரெடிட் அறிக்கையைத் தொடர்ந்து கண்காணியுங்கள்: உங்கள் கிரெடிட் அறிக்கையில் உள்ள தவறுகளை, தவறாகப் பதிவு செய்யப்பட்ட தவணைகள் அல்லது தவறான கடன் வரம்புகள் போன்றவற்றைத் தவறாமல் சரிபார்க்க வேண்டும். பிழைகள் (அ) தவறுகளை உடனடியாகச் சரி செய்யக் கோரலாம். கிரெடிட் பணியகங்கள் (Credit bureaus) இப்போது 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கையைப் புதுப்பிக்க அனுமதிக்கின்றன. இது கிரெடிட் அறிக்கையிடலில் கூடுதல் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை சேர்க்கிறது.

பல கடன் விண்ணப்பங்களைத் தவிருங்கள்: ஒரே நேரத்தில் பல கடன் அல்லது கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் அளிப்பது, உங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைக்கும். எனவே, தேவைப்படும்போது மட்டும் விண்ணப்பித்து, அடிக்கடி விண்ணப்பிப்பதைத் தவிர்க்கவும். 

உங்கள் ஸ்கோரை உயர்த்த முக்கிய வழிமுறைகள்:

அனைத்துப் பில்களையும் ஈஎம்ஐ-களையும் சரியான நேரத்தில் செலுத்துங்கள். கடன் பயன்பாட்டை 30% க்குக் கீழ் வைத்திருங்கள். கிரெடிட் கார்டுகளை பொறுப்புடன் பயன்படுத்துங்கள். உங்கள் கிரெடிட் அறிக்கையில் உள்ள தவறுகளைச் சரிபார்க்கவும், திருத்தவும். புதிய கடன் விண்ணப்பங்களைக் கட்டுப்படுத்தி, இடைவெளி விட்டு விண்ணப்பிக்கவும். இந்த வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், உங்கள் கிரெடிட் ஸ்கோரை விரைவாக உயர்த்தலாம். இது, கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு உங்களை மிகவும் கவர்ச்சியான கடன் வாங்குபவராக மாற்றும்.

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: