sovereign gold bonds online from SBI : சவரன் தங்க பத்திரங்களுக்கான சந்தா மே 21ம் தேதி முடிவடைகிறது. மே 25ம் தேதியில் இருந்து பத்திரங்கள் வெளியிடப்படும். இந்த நிதி ஆண்டுக்கான தங்க பத்திர முதலீட்டில் ஒரு கிராமின் விலை ரூ. 4,777 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ. ஆன்லைன் மூலம் இந்த sovereign gold bonds (SGB) பத்திரங்களை வாங்க அனுமதிக்கிறது.நீங்கள் ஏன் தங்க பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான 6 முக்கிய காரணங்கள் என்று கூறி எஸ்.பி.ஐ. தங்களின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனை வாங்குவதற்கான கால அவகாசம் மே 21ம் தேதியோடு முடிவடைகின்ற நிலையில், மே 25ம் தேதி அன்று பத்திரங்கள் வழங்கப்படும். ஆர்.பி.ஐயுடன் ஆலோசனை மேற்கொண்ட இந்திய அரசு, ஆன்லைன் மூலம் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான விண்ணப்பத்தை வழங்கி, ஆன்லைனில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கிராம் ஒன்றுக்கு ரூ. 50 தள்ளுபடி அளிக்க வேண்டும் என்று கூறியது. அத்தகைய முதலீட்டாளர்களுக்கு தங்க பாண்டின் விலை ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,727 ஆக இருக்கும்.
எஸ்.பி.ஐ.யில் ஆன்லைனில் முதலீடு செய்வது எப்படி?
எஸ்.பி.ஐ. நெட்பேங்கிங் கணக்கிற்கு செல்லவும்
அதில் இ சேவைகள் (eServices) என்ற தேர்வில் தங்க பத்திர பகுதிக்கு (Sovereign Gold Bond) செல்லவும்
அதில் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு சென்று ப்ரோசீட் தரவும்
விண்ணப்ப படிவத்தை நிரப்பவும். இது ஒன் – டைம் – ரெஜிஸ்ட்ரேஷன் என்பதை நினைவில் கொள்ளவும்.
சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்க
கொள்முதல் படிவத்தில் சந்தா அளவு மற்றும் பரிந்துரைக்கப்பட்ட விவரங்களை உள்ளிடவும்
submit பொத்தானை க்ளிக் செய்யவும்
வர்த்தக வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (எஸ்.எச்.சி.ஐ.எல்), ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட தபால் நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகளிலிருந்தும் முதலீட்டாளர்கள் தங்கப் பத்திரங்களை வாங்கலாம்.
2015ம் ஆண்டு தங்க பத்திர திட்டம் கொண்டு வரப்பட்டது. இது இருப்பில் இருக்கும் ”பிசிக்கல் கோல்ட்”-ன் தேவையை குறைப்பதற்காகவும் பயன்பாட்டிற்கு பதிலாக பொருளாதார தேவைகளுக்காக முதலீடு செய்வதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil