ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பொது மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய வசதியாக தங்கப் பத்திரம் என்ற முதலீட்டு திட்டத்தை அறிமுகம் செய்தது. இதில் ரிசர்வ் வங்கி ஆரம்ப முதலீட்டில் ஆண்டுதோறும் 2.5% என்ற விகிதத்தில் வட்டியும் வழங்கி வருகிறது. இதில் நீங்கள் தங்கத்தை நேரடியாக (Physical Gold) ஆக இல்லாமல் வாங்கும் தங்கத்தை பத்திரமாக பெற்றுக் கொள்ளலாம். இந்தாண்டு 2023-24 நிதியாண்டிற்கான IV-வது தங்கப் பத்திர சந்தா வெளியீடு பிப்ரவரி 12-ம் தேதி முதல் தொடங்குகிறது. பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 16, 2024 வரை 5 நாட்கள் தங்கப் பத்திரம் வாங்கி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அந்த வகையில் எஸ்.பி.ஐ வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் தங்கப் பத்திரம் வாங்கும் சேவையை வழங்கி வருகிறது. எஸ்.பி.ஐ வங்கி மூலம் ஆன்லைனில் தங்கப் பத்திரம் வாங்குவது எப்படி என்று பார்ப்போம். தனிநபர் 4 கிலோ வரை தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யலாம்.
ஆன்லைனில் எஸ்.பி.ஐ வங்கியில் தங்கப் பத்திரம் வாங்குவது எப்படி?
1. எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் லாக்கின் செய்ய வேண்டும்.
2. அடுத்து eServices பக்கம் சென்று Sovereign Gold Bond என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. Terms and Conditions செக் பாக்ஸை டிக் செய்யவும்.
4. அடுத்து வரும் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து Submit கொடுக்கவும்.
5. இப்போது இந்த Subscription படிவத்தில், எவ்வளவு தங்கள் வாங்க போகிறீர்கள் மற்றும் வாங்குபவரின் பெயர் (Nominee Name) குறிப்பிடவும்.
6. கடைசியாக படிவத்தை சமர்பிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“