Advertisment

ரூ20,000 சம்பளம் என்றால், மாதம்தோறும் சேரும் EPF தொகை இதுதான்! இந்த கணக்கீடு எப்படி?

How to calculate EPF, EPF news in tamil: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இது ஊழியர்களுக்கான நீண்ட கால சேமிப்பு திட்டமாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரூ. 210 முதலீட்டில் ரூ. 5000 ஓய்வூதியம் வழங்கும் சிறந்த முதலீட்டு திட்டம்; விபரங்கள் இதோ…

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இது ஊழியர்களுக்கான நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். தொழிலாளர் மற்றும் நிறுவனம் சேர்ந்து ஈபிஎஃப் நிதிக்கு பங்களிப்பு செய்கிறார்கள். அடிப்படை சம்பளம் ஒரு மாதத்திற்கு ரூ .6500க்கு அதிகமாக இருக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் விருப்பப்பட்டால் சேமிக்கலாம். மேலும், வருங்கால வைப்பு நிதியில் பங்களிப்பு செய்வது தொழிலாளரின் விருப்பம். சேமிக்கப்படும் தொகை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (ஈ.பி.எஃப்.ஓ) டெபாசிட் செய்யப்படும். இது காலப்போக்கில் நிதிகளை உருவாக்குகிறது மற்றும் ஓய்வுக்குப் பிறகு அந்த தொழிலாளரை பொருளாதார ரீதியாக வசதியாக மாற்ற உதவுகிறது.

Advertisment

EPF இன் வட்டி விகிதம் பெரும்பாலும் மத்திய அறங்காவலர் குழுவுடன் கலந்தாலோசித்து மத்திய அரசால் தீர்மானிக்கப்படுகிறது. ஈபிஎஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஈபிஎஃப் வட்டி வீத அறிவிப்பு ஆண்டு அடிப்படையில் கிடைக்கிறது.

ஈ.பி.எஃப் பங்களிப்பு

மொத்தம் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட எந்தவொரு நிறுவனமும் ஈபிஎஃப் பிடித்தம் செய்ய சட்டத்தால் அனுமதிக்கப்படுகிறது. ரூ.15,000 க்கும் குறைவாக மாத சம்பளம் வாங்கும் ஊழியருக்கு EPF உறுப்பினர் என்பது கட்டாயமாகும். ஒரு ஊழியரின் சம்பளம் 15,000 ரூபாயை விட அதிகமாக இருந்தால், அந்த ஊழியர் இதுவரை ஈபிஎஃப்-க்கு பங்களிக்கவில்லை என்றால், அவர் விருப்பப்பட்டால் விலகலாம். ஈபிஎஃப்ஒ சுய அறிவிப்பு படிவம் 11 ஐ பூர்த்தி செய்வதன் மூலம் இதை செய்ய முடியும்.

ஆண்டு இறுதி ஈபிஎஃப் மொத்த இருப்பானது, ஊழியர் மற்றும் நிறுவனத்தின் மொத்த பங்களிப்புகள் மற்றும் ஒவ்வொரு மாதத்திற்கும் பெறப்பட்ட வட்டி இரண்டின் கூட்டுத்தொகையாகும். ஒவ்வொரு மாதமும் கணக்கில் இருக்கும் இருப்பு அடிப்படையில் ஈபிஎஃப் வட்டி தீர்மானிக்கப்படுகிறது.

இபிஎஃப் கணக்கிடுவது எப்படி?

ஈபிஎஃப் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டது, சம்பளம் அடிப்படை + டிஏ

ஈபிஎஃப் பங்களிப்பு பொதுவாக தொழிலாளியின் சம்பளத்தில் 12% ஆகும்.

உங்கள் நிறுவனமும் 12% பங்களிக்கும். இந்த 12%, மறுபுறம், இரண்டு கணக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி- 3.67%

தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் (இபிஎஸ்) - 8.33%

நிறுவனம் 1% கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டும்

தொழிலாளர் வைப்பு இணைக்கப்பட்ட காப்பீடு (EDLI) - 0.5%

ஈபிஎஃப் நிர்வாக கட்டணம் - 0.5%

ஒரு ஈபிஎஃப் பங்களிப்பின் உதாரணத்தைப் பார்ப்போம். உங்கள் மாத சம்பளம் ரூ .20000 என்று வைத்துக் கொள்ளுங்கள். எனவே, ஈபிஎஃப் பங்களிப்பு எவ்வாறு பிரிக்கப்படும் என்பதை இப்போது பார்ப்போம்.

ஈபிஎஃப்க்கு தொழிலாளரின் பங்களிப்பு:  20000 இல் 12% என்பது ரூ 2,400

இபிஎஸ்-க்கு நிறுவனத்தின் பங்களிப்பு (வரம்புக்கு உட்பட்டது) : ரூ .1,250

ஈ.பி.எஃப்க்கு நிறுவனத்தின் பங்களிப்பு:  (ரூ. 2400- ரூ .1,250) = ரூ .1,150

ஒவ்வொரு மாதமும் மொத்த இபிஎஃப் பங்களிப்பு:  ரூ 2,400+ ரூ .1,150 = ரூ 3,550

ஒரு மாத ஈபிஎஃப்: ரூ.3,550 + ரூ.1,250 = ரூ .4,800 ஆக உள்ளது, இது ஈ.பி.எஃப் இன் ஒரு பகுதியாக மாதந்தோறும் டெபாசிட் செய்யப்படுகிறது.

இபிஎஸ் பங்களிப்பு: தெரிந்து கொள்ள வேண்டியவை

நிறுவனத்தின் பங்கு, பி.எஃப் இன் பங்களிப்புக்கு நிதியளிக்கப் பயன்படுகிறது, ஆனால் ஊழியர் பங்களிப்பு செய்ய வேண்டியதில்லை.

இபிஎஸ் பங்களிப்பு ஒரு ஊழியர் 58 வயதை எட்டும் வரை மட்டுமே செய்ய்ப்படும். 58 வயதிற்கு மேல் பணிபுரிபவர்களுக்கு இபிஎஸ் பங்களிப்பு செய்யப்படாது.

சர்வதேச ஊழியர்களுக்கு, அதிக சம்பள வரம்பான ரூ .15,000 செப்டம்பர் 11, 2010 க்கு பிறகு நடைமுறையில் இல்லை.

50 வயதிற்குப் பிறகு வேலைக்கு சேரும் ஒருவர் ஓய்வூதியதாரராக இல்லாவிட்டால், ஓய்வூதிய பங்களிப்பைப் பெற முடியாது, ஏனெனில் அவர் 10 ஆண்டு தகுதிவாய்ந்த சேவையை முடிக்க மாட்டார். உறுப்பினர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கப்படும்.

EDLI

அதிக சம்பளம் வாங்குபவர்கள் PF செலுத்தினாலும், பங்களிப்புகள் பெற ஒட்டுமொத்த ஊதிய வரம்பு ரூ. 15000 / -.

ஒரு உறுப்பினர் 58 வயதை எட்டியிருந்தால், ஓய்வூதிய பங்களிப்பு எதுவும் செலுத்தப்படாவிட்டாலும் கூட EDLI பங்களிப்புகள் வழங்கப்படும்.

உறுப்பினர் பணிபுரியும் மற்றும் பி.எஃப் சம்பாதிக்கும் வரை இது செலுத்தப்படும்.

ஈபிஎஃப் பங்களிப்பின் நன்மைகள்

உங்கள் ஈபிஎஃப் இருப்பு உங்களுக்கு 8-9 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தியாவில், தற்போதைய வட்டி விகிதம் 8.50 சதவீதமாகும். இந்த உயர் வட்டி விகிதம் இந்த ஓய்வூதியத் திட்டத்தை சிறப்பானதாக்குகிறது.

உங்கள் EPF, EEE என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, நீங்கள் ஒரு ஈபிஎஃப் கணக்கில் வைத்த பணம், நீங்கள் பெறும் வட்டி மற்றும் நீங்கள் திரும்பப் பெறும் பணம் அனைத்துக்கும் வரிவிலக்கு உண்டு. ஆனால், ஆண்டுக்கு ரூ .2.5 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்களால் ஈபிஎஃப் பங்களிப்புகளில் ஈட்டப்படும் வட்டிக்கு இப்போது வரி விதிக்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Epfo Epf
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment