EPFO Balance Check : ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது மத்திய அரசின் ஆதரவுடன் கூடிய தன்னார்வ ஓய்வூதிய சேமிப்புத் திட்டம் ஆகும். இது தனியார் துறையில் அனைத்து விதமான சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பலன்களை வழங்ககிறது.
ஒரு ஊழியர் தனது அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தை மாதாந்திர அடிப்படையில் இபிஎஃப் சேமிப்பிற்குப் பங்களிக்கிறார். கூடுதலாக, முதலாளி சமமான தொகையை வழங்குகிறார்.
மேலும், EPF திட்டம், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிர்வகிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.
EPFO கணக்கிற்கான வட்டி விகிதம் என்ன?
இபிஎஃப் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் இபிஎஃப்ஓ (EPFO) இன் மத்திய அறங்காவலர் குழுவுடனான ஆலோசனைக்குப் பிறகு நிதி அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. இபிஎஃப்க்கான நடப்பு ஆண்டு வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உள்ளது, இது கடந்த ஆண்டு 8.10 சதவீதத்தை விட சற்று அதிகமாகும்.
உங்கள் EPF இருப்புக்கான வட்டியை எவ்வாறு கணக்கிடுவது?
உங்கள் EPF கணக்கு இருப்புக்கான வட்டியைக் கணக்கிட, நீங்கள் மாதாந்திர இறுதி இருப்பு மற்றும் நடைமுறையில் உள்ள EPF வட்டி விகிதத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாதத்திற்கும் தனித்தனியாக வட்டி கணக்கிட வேண்டும். நீங்கள் புதிய EPF கணக்கைத் திறக்கும்போது, தொடக்கத் தொகை பூஜ்யமாக இருப்பதால் முதல் மாதத்திற்கு வட்டி பூஜ்ஜியமாக இருக்கும்.
இரண்டாவது மாதத்திற்கு, பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்தி EPF இருப்புக்கான வட்டியைக் கணக்கிடலாம்.
EPF மீதான மாதாந்திர வட்டி = (மாதத்தின் தொடக்க இருப்பு x தற்போதைய வட்டி விகிதம்)/12 ஆகும்.
உதாரணமாக, முதல் மாத பங்களிப்பு ரூ.10,000 என்று வைத்துக் கொள்வோம். இதற்கு எந்த வட்டியும் வசூலிக்கப்படாது.
அதன்பிறகு, இரண்டாவது மாதத்தில் புதிய பங்களிப்பு வழங்கப்படுவதால் தொடக்க இருப்பு இரட்டிப்பாகும். எனவே, 20,000 ரூபாய் கணக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படும்.
திரட்டப்பட்ட வட்டி ரூ. 135.83 (20000 x 8.15 சதவீதம்)/12 ஆக இருக்கும், இது ரூ.136 ஆக இருக்கும். இதேபோன்ற கணக்கீடு ஒவ்வொரு மாதமும் செய்யப்பட வேண்டும்.
வருடாந்திர வட்டி தொகை ஆண்டின் இறுதியில் அனைத்து நிலுவைகளையும் சேர்த்தால் உங்களுக்கு கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“