வெகு தூரம் பயணிக்க விரும்புவோர் பெரும்பாலும் ரயில் பயணங்களை தேர்ந்தெடுக்கின்றனர். ஏனென்றால், பேருந்து மற்றும் விமான சேவைகளை காட்டிலும் ரயில் கட்டணம் குறைவு. முன்பு போல் அல்லாமல்,எளிதாக ஐஆர்சிடிசி மற்றும் வேறு செயலிகள் மூலமாக ரயில் டிக்கெட் புக்கிங் செய்து விடலாம்.
ஆனால், சில சமயங்களில் பயணங்களில் மாற்றம் ஏற்படும் சமயத்தில், போர்டிங் பாயிண்டை மாற்றுவது சிலருக்கு கடினமாக இருக்கும். அவர்களுக்கான செய்தி தான் இது. ஆன்லைனில் புக் செய்த டிக்கெட்டின் போர்டிங் பாயின்டை எளிதாக மாற்றுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
போர்டிங் பாயிண்டை மாற்றுவது எப்படி
- முதலில் ஐஆர்சிடிசியின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
- அதில், லாகினுக்கு தேவையான தகவல்களை பதிவிட வேண்டும்.
- அடுத்ததாக, My Transactions பக்கத்திற்கு சென்று, Booking Ticket History கிளிக் செய்ய வேண்டும்.
- அதில், போர்டிங் பாயிண்ட் மாற்ற வேண்டிய ரயிலை தேர்ந்தெடுத்து, Change Boarding Point கொடுக்க வேண்டும்.
- தொடர்ந்து, நீங்கள் புக் செய்த ரயிலில் ஏறுவதற்கான வேறு வழித்தடங்கள் திரையில் தோன்றும். அதில், நீங்கள் ஏற வேண்டிய ரயில் நிலையத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த ஸ்டேப்ஸ் முடிந்ததும், போர்டிங் பாயிண்ட மாற்றப்பட்டதற்கான குறுஞ்செய்தி டிக்கெட் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு வந்துவிடும்.
ஆனால், இந்தப் போர்டிங் பாயிண்டை மாற்றுவதற்கு முன்பு கீழே குறிப்பிட்டவற்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள்
- இந்த வசதி ஆன்லைன் முன்பதிவுகளுக்கு மட்டுமே
- போர்டிங் பாயிண்ட் மாற்றத்தை ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே செய்ய வேண்டும்
- ஒரு முறை மட்டுமே போர்டிங் பாயிண்ட் மாற்ற முடியும்
- டிக்கெட் ஏஜென்சி மூலம் புக் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களில் மாற்றம் செய்ய முடியாது.
- ஐஆர்சிடிசியின் இணையதளத்தின்படி, ஒரு பயணி போர்டிங் பாயிண்டை மாற்றிவிட்டால், அசல் போர்டிங் பாயிண்டிலிருந்து ரயிலில் ஏறுவதற்கான வாய்ப்பை முழுமைாக இழந்துவிடுவார்.
- VIKALP விருப்பத்துடன் PNR களுக்கு போர்டிங் பாயின்ட் மாற்றம் அனுமதிக்கப்படாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil