சமீப காலங்களாக டிஜிட்டல் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வங்கியின் பணப்பரிவர்த்தனைகளில் நூதன முறையில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதனை தடுத்திட, உங்கள் வங்கி கணக்குடன் நீங்கள் உபயோகிக்கும் மொபைல் நம்பரை இணைப்பது அவசியமாகும். அப்போது தான், அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகளும் மொபைல் வாயிலாக செக் செய்யும் முடியும்.
ஏதெனும், பணப்பரிவர்த்தனை உங்களுக்கு தெரியாமல் நடந்திருக்கும் பட்சத்தில், உடனடியாக வங்கியில் புகாரளிக்க முடியும்.இதுமட்டுமின்றி, ஏடிஎம்-இல் 10 ஆயிரத்திற்கும் மேல் எடுப்பதற்கும், மொபைல் நம்பர் அல்லது இமெயில் ஐடியை கணக்குடன் இணைப்பது கட்டாயமாகும். செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பர் வைத்து தான், பணத்தை எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ நெட் பேங்கிங் வாயிலாக மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி
- முதலில் எஸ்பிஐயின் http://www.onlinesbi.com பக்கத்தில் லாகின் செய்ய வேண்டும்
- பின்னர், இடதுபுற பேனலில் உள்ள My accounts பிரிவின் கீழ், Profile – personal details – change mobile no ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்த திரையில், உங்களின் வங்கி எண், மொபைல் நம்பர் பதிவிட்டு, சப்மிட் கொடுக்க வேண்டும்.
- பதிவிட்ட மொபைல் நம்பரின் கடைசி இரண்டு நம்பரும் மட்டும் உறுதிப்படுத்துவதற்காக திரையில் தோன்றும்.
இமெயில் ஐடியை ஆன்லைனில் மாற்றும் முறை:
- முன்பு சொன்னது போலவே, எஸ்பிஐ ஆன்லைன் பக்கத்தில் லாகின் செய்ய வேண்டும்.
- இடதுபுற பேனலில் உள்ள My accounts பிரிவின் கீழ், Profile – personal details – change email id ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- தொடர்ந்து, உங்களின் சேமிப்பு கணக்கை கிளிக் செய்து, இமெயில் ஐடியை பதிவிட்டு, சப்மிட் கொடுக்க வேண்டும்.
- தொடர்ந்து, மொபைலுக்கு வரும் ஓடிபி நம்பரை பதிவிட்டால் போதும், பதிவிட்ட இமெயில் ஐடி வங்கி கணக்குடன் வெற்றிகரமாக இணைக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil