இன்றைய காலத்தில் ஆதார் அட்டை ஒரு அத்தியாவசிய ஆவணமாக மாறியுள்ளது. அரசின் திட்டங்கள் முதல் நிதி சேவைகள் வரை அனைத்து இடங்களிலும் ஆதார் தேவைப்படுகிறது. ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்தியரின் தனித்துவமான அடையாளமாகும். அதில் நபரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். ஆதார் பெறும்போது, ஒவ்வொரு நபரும் கருவிழி மற்றும் விரலின் பயோமெட்ரிக் விவரங்களை ஸ்கேன் செய்ய வேண்டும்.
திருமணம் செய்யவிருக்கும் அல்லது திருமணமான பெண்கள் தங்கள் ஆதார் அட்டையில் பெயர் மாற்றத்தின் நடைமுறையைப் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் திருமணத்திற்குப் பிறகு எந்த சிக்கல்களும் ஏற்படாது. ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறைகளைப் பயன்படுத்தி ஆதார் அட்டையில் உங்கள் பெயரை மாற்றலாம்.
ஆன்லைனில் மாற்றுவது எப்படி?
உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி, முதலில் online self-service update portal-ஐ லாக் இன் செய்ய வேண்டும்.
உங்கள் பெயர் அல்லது துணைப் பெயர் அல்லது இரண்டையும் மாற்ற நீங்கள் Request கொடுக்கலாம்.
இப்போது நீங்கள் உங்கள் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP மூலம் நீங்கள் விரும்பிய மாற்றத்தை செய்து கொள்ளலாம்.
இதற்கு நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
ஆதார் மையங்கள் மூலம் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டுமெனில்,
உங்கள் வீட்டிற்கு அருகே ஆதார் மையத்துக்கு செல்லவும்
நீங்கள் மாற்ற விரும்பும் பெயர்களுக்கு ஆதாரமாய் விளங்கும் ஒரிஜினல் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு உங்களிடமே திருப்பி கொடுக்கப்படும்.
தேவைப்பட்டால், உங்கள் biometrics அப்டேட் செய்து கொள்ளலாம்.
இதற்கு ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆதார் அட்டையில் பெயரைப் புதுப்பிக்க தேவையான ஆவணங்கள்
திருமணத்திற்குப் பிறகு ஆதார் அட்டையில் தனது பெயரை மாற்ற விரும்பும் ஒரு பெண், ஆதார் சேர்க்கை மையத்தில் விவரங்களை புதுப்பிக்கும் நேரத்தில் சில ஆவணங்களை வழங்க வேண்டும். விண்ணப்பதாரர் அரசு வழங்கிய முகவரி அடங்கிய திருமண சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் அசல் திருமண சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil