ஆதார் அடையாள அட்டையில் பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண் மற்றும் முகவரி போன்றவற்றை மாற்றிக் கொள்ளலாம். இதில் பயோமெட்ரிக் தகவலில் கருவிழி, கைரேகைகள் மற்றும் முக புகைப்படம் ஆகியவையும் உள்ளன.
இதனால் நீங்கள் ஆன்லைனில் உங்களது ஆதார் புகைப்படத்தை மாற்றிக் கொள்ள இயலாது என்ற கருத்து நிலவுகிறது. இதன் பொருள் மாற்றிக் கொள்ளவே இயலாது என்பது அல்ல. சற்று கடினம் என்பதே ஆகும்.
எனினும், உங்கள் ஆதார் அட்டையில் பழைய புகைப்படம் பதிவாகியிருந்தால், அதை நீங்கள் மாற்ற விரும்பினால், ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று புதுப்பிப்பைப் பெறலாம்.
அதற்கு நீங்கள் அருகாமையில் உள்ள ஆதார் அட்டை மையத்துக்கு செல்ல வேண்டும். அங்கு நீங்கள் புதுப்பிக்கப் போகும் தகவல்களை தேவையான படிவத்தில் நிரப்பிக் கொடுக்க வேண்டும்.
பயோமெட்ரிக் தகவல்கள் மற்றும் புகைப்படத்தை உரிய ஆவணங்கள் சமர்பித்து மாற்றிக் கொள்ளலாம். இதற்கு கட்டணமாக ரூ.100 கொடுக்க வேண்டும்.
தொடர்ந்து உங்களுக்கு ஒரு ஒப்புகை சீட்டு (acknowledgement slip ) கொடுப்பார்கள். 90 நாள்களுக்குள் ஆதார் அட்டையில் உங்களது புகைப்படம் மாற்றித் தரப்படும்.
அரசு மற்றும் அரசு சாரா சேவைகள், மானியப் பயன்கள், ஓய்வூதியங்கள், உதவித்தொகைகள், சமூக நலன்கள், வங்கிச் சேவைகள், காப்பீட்டுச் சேவைகள், வரிவிதிப்புச் சேவைகள், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அட்டை பயன்படுகிறது.
ஆதார் ஆன்லைன் சேவைகளை அணுக பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் அவசியம். ஆகவே மொபைல் எண்ணை அவசியமின்றி மாற்றிக் கொள்ளாமல் இருத்தல் நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“