கடன் வாங்க உதவும் சிபில் ஸ்கோர்… ஆன்லைனில் இப்படி செக் பண்ணுங்க!
Check Free Credit Score Report Online in Just 2 Mins in tamil: ஒரு தனிநபரின் சிபில் ஸ்கோர் என்பது முந்தைய கடன்கள் மற்றும் திருப்பிச் செலுத்துதல்கள் மற்றும் இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் கிரெடிட் கார்டு தகவல் போன்ற பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.
Check Free Credit Score Report Online in Just 2 Mins in tamil: ஒரு தனிநபரின் சிபில் ஸ்கோர் என்பது முந்தைய கடன்கள் மற்றும் திருப்பிச் செலுத்துதல்கள் மற்றும் இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் கிரெடிட் கார்டு தகவல் போன்ற பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.
Check Your CIBIL Credit Score Free Online in tamil
check cibil score free Tamil News: பொதுவாக கடன் வாங்கும் முயற்சியில் ஈடுபடும் மக்கள் அடிக்கடி கேள்விப்படும் சொல் தான் இந்த சிபில் ஸ்கோர் (CIBIL Score). இது பலருக்கும் புரியாத ஒன்றாக இருந்து வருகிறது. மேலும், சிபில் ஸ்கோர் பற்றி நம்மிடம் பல கேள்விகள் இருக்கின்றன. அதில் சிபில் ஸ்கோர் என்றால் என்ன? இவை ஏன் முக்கியம்? இதைப் பராமரிப்பது அல்லது உயர்த்துவது எப்படி? போன்றவை சில முக்கியவைகளாக உள்ளன
Advertisment
சிபில் ஸ்கோர் என்றால் என்ன?
CIBIL என்பது கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட் என்பதைக் குறிக்கிறது. இது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகும். இது தனிநபர்களுக்கும் வணிகத்திற்கும் கூட கடன் அறிக்கைகள் மற்றும் மதிப்பெண்களை வழங்குகிறது.
ஒரு தனிநபரின் சிபில் ஸ்கோர் என்பது முந்தைய கடன்கள் மற்றும் திருப்பிச் செலுத்துதல்கள் மற்றும் இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் கிரெடிட் கார்டு தகவல் போன்ற பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.
Advertisment
Advertisements
கடன் வாங்கிய தொகையை சரியான நேரத்தில் திருப்பித் தருவது எவ்வளவு சாத்தியம் என்பதை இது அடிப்படையில் வங்கியிடம் கூறுகிறது. சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை கணக்கிடப்படுகிறது. 300 குறைந்த சிபில் ஸ்கோர் மற்றும் 900 அதிக சிபில் ஸ்கோர் ஆகும். ஒரு தனிநபரின் அதிக சிபில் ஸ்கோர், வங்கியில் கடன் பெறுவதற்கான சிறந்த வாய்ப்புகளை உருவாக்குகிறது.
சிபில் ஸ்கோர் - எவ்வளவு அதிகம்? எவ்வளவு குறைவு?
600க்கு கீழே : மிகவும் குறைவு
600 - 649 : குறைவு
650 - 699 : பரவாயில்லை
700 - 749 : நல்ல ஸ்கோர்
750 - 900 : மிகவும் நல்ல ஸ்கோர்
சிபில் ஸ்கோரை எதெல்லாம் பாதிக்கிறது?
முன்பு குறிப்பிட்டது போல், சிபில் ஸ்கோர் அடிப்படையில் நிதிப் பரிவர்த்தனைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. எனினும், கடன் EMI தொகையை தாமதமாக செலுத்துவது, நிறைய கிரெடிட் கார்டு வைத்திருப்பது, கட்டணங்களை தாமதமாக செலுத்துவது ஆகிய காரணங்களால் சிபில் ஸ்கோர் அடிபடும்.
சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவது கடினமாகும். பெரும்பாலான வங்கிகள் கடன் விண்ணப்பத்தை நிராகரித்துவிடுவார்கள் அல்லது அதிக வட்டி விகிதத்துக்கு கடன் வழங்குவார்கள்.
சிபில் ஸ்கோரை அதிகரிப்பது எப்படி?
கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை குறைவாக வைத்திருப்பது, உரிய நேரத்தில் EMI செலுத்துவது, நிறைய கடன்கள் வாங்காதிருப்பது, பெர்சனல் கடன் அதிகம் வாங்குவதை தவிர்ப்பது, கடன்களுக்கு நிறைய விண்ணப்பிக்காமல் இருப்பது போன்றவற்றால் சிபில் ஸ்கோரை உயர்த்த முடியும்.
படி 2: 'உங்கள் CIBIL ஸ்கோரைப் பெறு' (‘Get your CIBIL Score’) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 3: FAQ பகுதிக்கு கீழே பார்க்கவும். அதில் CIBIL கிரெடிட் அறிக்கையைப் பெற நான் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்? (How much do I need to pay to get a CIBIL Credit Report?) என்று இருக்கும்.
படி 4: அதில் (In case you are not interested in any of our paid plans, you can still opt for a Free CIBIL Credit Report here) இங்கே, இலவச CIBIL கிரெடிட் ரிப்போர்ட் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
படி 5: திறக்கும் பக்கத்தில், "Get Your Free CIBIL Score" விருப்பத்தை கிளிக் செய்யவும்.
படி 6: திறக்கும் பக்கத்தில், உங்களிடம் ஏற்கனவே கணக்கு இல்லையென்றால், முதலில் புதிய கணக்கை உருவாக்க வேண்டும். பக்கத்தில் உள்ள உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஐடி மற்றும் உங்கள் மொபைல் எண் போன்ற விவரங்களை நிரப்பவும். உங்கள் பான் எண், பாஸ்போர்ட் எண், வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிம எண் அல்லது ரேஷன் கார்டு எண் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
படி 7: இந்த அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, ஏற்றுக்கொள் மற்றும் தொடரவும் (Accept and Continue) விருப்பத்தை கிளிக் செய்யவும்.
படி 8: இப்போது, உங்கள் விவரங்களைச் சரிபார்க்க, உங்கள் மொபைல் எண்ணில் OTPயைப் பெறுவீர்கள். OTP ஐத் தட்டச்சு செய்து, பின்னர் 'தொடரவும்' பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படி 9: இப்போது, உங்களுக்கு இந்த இடத்தில் உங்களது சிபில் ஸ்கோர் காட்டப்படும். அப்படி தோன்றவில்லை என்றால், 'Go to dashboard' விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்க்கவும்.
படி 10: இப்போது, நீங்கள் myscore.cibil.com என்ற இணையதளத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்.
படி 11: இப்போது உறுப்பினர் உள்நுழைவு விருப்பத்தை கிளிக் செய்யவும்.
படி 12: உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிடவும், உங்கள் CIBIL ஸ்கோர் டாஷ்போர்டில் காட்டப்படும்.