2020-21ஆம் ஆண்டுக்கான PF வட்டித் தொகைக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் EPFO வாடிக்கையாளர்கள் சுமார் 6 கோடி பேர் பயனடைவார்கள். இந்தாண்டின் PF வட்டி விகிதம் 8.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, விரைவில் அனைத்து பயனாளிகளின் PF கணக்குகளுக்கும் 2020-21ஆம் ஆண்டுக்கான வட்டித் தொகை செலுத்தப்படும். பிஎஃப் வட்டி தொகை கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டதா என்பதை நீங்களே பார்க்கும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உமாங் செயலி
அரசின் உமாங் செயலியில் ஊழியர்களுக்கான பிஎஃப் தொகை பேலன்ஸை காண முடியும். இந்த சாப்ட்வேர் பல்வேறு அரசு சேவைகளை ஒரே இடத்தில் பயன்படுத்தி நலன் பெறும் நோக்கில் அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பிஎஃப் பேலனஸ் பார்க்கலாம், பிஎஃப் பணத்தை எடுக்கலாம் உள்ளிட்ட பல சேவைகள் உள்ளன. அந்த செயலியில், ஊழியர் மொபைல் நம்பர் மூலம் ரெஜிஸ்டர் செய்துகொள்ளலாம்.
EPFO வலைதளம்
UAN நம்பரை பயன்படுத்தி, EPFO வலைதளத்தில் எளிதாக பேனல்ன் தொகையை காணலாம். பாஸ்புக்கை தேவைப்பட்டால் அதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- முதலில் https://www.epfindia.gov.in/ என்ற முகவரியில் செல்லவும்
- For Employees என்ற பிரிவின் கீழ் For Employees என்ற சேவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அதன் பின்னர் Services என்ற வசதியில் Member Passbook என்பதை கிளிக் செய்யவும்.
- பிஎஃப் எண் மற்றும் பாஸ்வேர்டு மூலமாக நீங்கள் உங்களது பிஎஃப் பேலன்ஸ் தொகையைப் பார்க்க முடியும்.
மிஸ்டு கால் மூலம் பிஎஃப் பேலன்ஸ்
பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமாகவே நீங்கள் பேலன்ஸ் பார்க்க முடியும். 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் பிஎஃப் பேலன்ஸ் குறித்த விவரங்கள் உங்களுக்கு குறுஞ்செய்தியில் வரும். இச்சேவைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.
எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் பேலன்ஸ்
SMS மூலமாகவும் நீங்கள் பேலன்ஸ் பார்க்கலாம். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN ENG என டைப் செய்து எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இங்கே ENG என்பது மொழி - ஆங்கிலம். மற்ற மொழிகளுக்கு ENG இடத்தில் அதனை டைப் செய்து பேலன்ஸ் பார்க்க முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.