பி.எஃப் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டும் திருத்தப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது 8.5 சதவீதம் பி.எஃப் வட்டி வழங்கப்படுகிறது.
இதனால் பெரும்பாலானோர் பிஎஃப்பில் முதலீடு செய்துவருகின்றனர். மேலும் இதில் சில வரிச் சலுகைகளும் உள்ளன.
ஆன்லைனில் செக் செய்வது எப்படி?
1) www.epfindia.gov.in என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
2) சேவைகள் என்பதை கிளிக் செய்து பணியாளர்கள் (employees) என்பதை தேர்வு செய்யவும்.
3) UAN எண் மற்றும் கடவுச் சொல்லை லாக்கின் செய்ய வேண்டும்.
4) லாக்கின் முடிந்த பின்னர் உங்கள் பிஎஃப் கணக்கு திறக்க தொடங்கும்.
பதிவு செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தும் கணக்கின் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
மேலும், மத்திய அரசு ஆதார் அப்டேஷன், பான், வாக்காளர் அடையாள அட்டை, வருங்கால வைப்பு நிதி சேவைகள், அஞ்சலகம் என பலவற்றிலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக பல மணி நேரங்கள் சென்று அலைய வேண்டிய வேலைகள் கூட, சில நிமிடங்களில் ஆன்லைனில் முடித்து விடும் நிலை உருவாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“