How to check PF Account Balance Tamil News : தொழிலாளர்களின் நலன் காக்க அரசால் உருவாக்கப்பட்டது, தொழிலாளர் வைப்பு நிதி திட்டம். தொழிலாளர்களின் நலன் காக்கப்படுவதற்காக, வருங்கால வைப்பு நிதி சட்டம் 1956-ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, வைப்பு நிதி திட்டத்தை முறைப்படுத்தி வருகிறது.
தொழிலாளர்கள் தங்களது வைப்பு நிதி நிலவரங்களை அறிந்துக் கொள்ள, தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பதவு செய்யப்பட்ட தனிநபர் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் தனித்துவமான வைப்பு நிதி எண்ணை தெரிந்திருக்க வேண்டும். UAN எனப்படும் இந்த எண்ணை, திட்டத்தில் சேரும் ஒவ்வொரு பயனாளருக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால ஒதுக்கப்படுகிறது. தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றிய பின், வேறு நிறுவனத்தில் இணைந்தாலும் அதே கணக்கு எண்ணை பராமரிப்பது கட்டாயமானது.
உங்களது வைப்பு நிதி கணக்கில், எவ்வளவு தொகை உள்ளது என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? கீழே உள்ள எளிமையான வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
- மிஸ்ட் கால் மூலம் எவ்வாறு தெரிந்துக் கொள்வது ?
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணிலிருந்து, 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் அளிக்கவும். பின்னர், உதவி மையத்திலிருந்து உங்களுக்கு உதவ போன் செய்வாரகள். அவர்களிடம், உங்களது வைப்பு நிதி நிலுவைத் தொகை குறித்து விசாரிக்கலாம்.
- எஸ்.எம்.எஸ் மூலம் எவ்வாறு தெரிந்துக் கொள்வது?
தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணிலிருந்து, 7738299899 என்ற எண்ணுக்கு, EPFOHO UAN என டைப் செய்து எம்.எம்.எஸ் அனுப்புவதன் மூலம், வைப்பு நிதி நிலுவை குறித்தான தகவல்களை பெறலாம்.
- உமாங் செயலி மூலம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்?
- பிளே ஸ்டோரிலிருந்து உமாங் ( Umang app ) செயலியை தரவிறக்கம் செய்யவும்.
- செயலியில் EPFO ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
- பின், தொழிலாளர் சேவைகான பிரிவை க்ளிக் செய்யவும்.
- உங்களது தொழிலாளர் வைப்பு நிதி இருப்பை தெரிந்துக் கொள்ள, 'View Passbook' ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
- உங்கள் UAN எண்ணை பதவிட்டு, UAN இல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP ஐ அனுப்ப Get OTP ஐக் கிளிக் செய்ய வேண்டும். பின், கிடைக்கப் பெற்ற OTP ஐ உள்ளிட்டு 'உள்நுழை' என்பதைக் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- நீங்கள் ஈபிஎஃப் இருப்பை சரிபார்க்க விரும்பும் நிறுவனத்தின் உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்கவும்.
- இறுதியாக, உங்கள் பாஸ்புக் உங்கள் ஈபிஎஃப் நிலுவைத் தொகையுடன் திரையில் தோன்றும்
- தொழிலாளர் வைப்பு நிதி இணைய தளத்தை பயன்படுத்துதல் EPFO Portal :
- தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பின் அதிகாரப்பூர்வமான இணைய தளமான www.epfindia.gov.in. ஐ பார்வையிடவும்.
- இணைய தளத்தில் சேவைகள் எனும் பிரிவில், தொழிலாளர்கள் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்ததாக, உறுப்பினர் கணக்கு எண் ஆப்ஷனை அழுத்தவும்.
- அடுத்ததாக, உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைய வேண்டும். அதன் பின்னர், உங்கள் ஈபிஎஃப் கணக்கை அணுகலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”