ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (PF) அமைப்பு ஊழியர்களுக்கு, 8.5% வட்டி விகிதத்துடன், ஒரு நல்ல வரி சேமிப்பு முதலீட்டு விருப்பமாக வழங்கப்படுகிறது. இந்த வட்டி வகிதம் மற்ற உறுதியளிக்கப்பட்ட முதலீட்டு வட்டி விகிதங்களை விட மிக அதிகம். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வழங்கும் பல்வேறு திட்டங்களில் ஒன்று இபிஎஃப்.
ஆனால், பிஎஃப் நிதிகளுக்கு பங்களிப்பைத் தொடங்கிய பிறகு ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்று யோசிக்கிறார்கள். ஊழியர்கள் தங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்க 3 விருப்பங்கள் உள்ளன. கூடுதலாக, ஒரு EPFO உறுப்பினர் மேலும் விவரங்கள் அல்லது சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான https://www.epfindia.gov.in/ என்பதைப் பார்வையிடலாம்.
வலைத்தளம் மூலம் பிஎஃப் இருப்பைச் சரிபார்த்தல்
இணையதளம் மூலம் PF இருப்பை சரிபார்க்க, நீங்கள் https://www.epfindia.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
பின்னர் 'உங்கள் EPF இருப்பு அறிய இங்கே கிளிக் செய்யவும்' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அதன் பிறகு, பக்கம் உங்களை epfoservices.in.epfo பக்கத்திற்கு கொண்டு செல்லும். அங்கு, "உறுப்பினர் இருப்பு தகவல்" சாளரத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அதன் பிறகு, உங்கள் EPFO அதிகாரப்பூர்வ இணைப்பை கிளிக் செய்யவும். இங்கே நீங்கள் உங்கள் PF கணக்கு எண், பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
தகவலை சரியாக பூர்த்தி செய்த பிறகு, 'சமர்ப்பி' சாளரத்தில் கிளிக் செய்யவும். பிறகு, உங்கள் PF இருப்பு திரையில் காட்டப்படும்.
குறுஞ்செய்தி மூலம் (UAN உடன்) பிஎஃப் இருப்பைச் சரிபார்த்தல்
நீங்கள் இணையதளம் மூலம் பார்க்க விரும்பவில்லை அல்லது உங்களுக்கு இணைய அணுகல் இல்லை என்றாலும், உங்கள் பிஎஃப் இருப்பை குறுஞ்செய்தி மூலம் சரிபார்க்கலாம். 'EPFOHO UAN ENG' என டைப் செய்து 7738299899 க்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அதற்கு உங்கள் 12 இலக்க தனித்துவ அடையாள எண் (UAN) தேவை. இந்த வசதியை நீங்கள் 10 வெவ்வேறு மொழிகளில் பெறலாம்.
மிஸ்டுகால் மூலம் பிஎஃப் இருப்பைச் சரிபார்த்தல்
ஒரு ஊழியர் தனது கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து ஒரு மிஸ்டுகால் அழைப்பை கொடுப்பதன் மூலம் பிஎஃப் இருப்பைச் சரிபார்க்கலாம். 011-22901406 என்ற எண்ணில் ஒரு மிஸ்ட் கால் கொடுத்து பிஎஃப் இருப்பை பெறலாம் என்று இபிஎஃப்ஒ தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil