உங்க பி.எஃப் அக்கவுண்டில் எவ்ளோ பணம் இருக்கு? உடனே அறிய ஒரு எஸ்எம்எஸ் போதும்!

எஸ்எம்எஸ், மிஸ்டு கால் மூலம் பி.எஃப் பேலன்ஸ் தெரிந்துகொள்ளலாம்.

ஊழியர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் EPF(Employee Provident Fund) எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதியை வழங்கும். பொதுவாக இது மாதம் தோறும் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அவர்களது பி.எப். கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஊழியர்கள் சம்பளத்தில் எவ்வளவு பிடித்தம் செய்யப்படுகிறதோ அதே அளவு பணத்தை நிறுவனத்தின் உரிமையாளரும் டெபாசிட் செய்ய வேண்டும். இதன் மூலம் மத்திய அரசு உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் ஊழியர்கள் பணியை விட்டு செல்லும் போதோ அல்லது பணி மாறும்போதோ அந்த தொகையினை எடுத்து கொள்ளலாம்.

பிஎப் முன்பணம் பொதுவாக குழந்தைகளின் திருமணம், குழந்தைகளின் உயர் கல்வி, வீட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துதல், அவசரகால மருத்துவ சேவை வீட்டைப் புதுப்பித்தல், வீடு வாங்குவது, நிலம் வாங்குதல் போன்றவற்றுக்காக வழங்கப்படும். தற்போது பணத்தேவைக்கு கோவிட் -19ஐ ஒரு காரணமாகக் கூறி தொழிலாளர்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என சமீபத்தில் மத்திய அரசு அனுமதித்துள்ளது. பி.எஃப் பணத்தை ஆன்லைனில் எடுக்கும் முன், உங்களுக்கு `யு.ஏ.என்’ (Universal Account Number) எனச் சொல்லப்படும் யுனிவர்சல் கணக்கு எண் அவசியம். உங்களுடைய பிஎப் கணக்கில் எவ்வளவு உள்ளது என்பதை எஸ்எம்எஸ் மற்றும் மிஸ்டு கால் சேவை மூலமாக சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

•முதலில் 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தேவையான மொழியை (ENG) தேர்வு செய்ய வேண்டும். பிறகு உங்கள் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

•முதலில் UAN எண்ணில் உங்கள் வங்கி கணக்கு, ஆதார், பான் எண் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். UAN எண்ணில் பதிவு செய்துள்ள நம்பரிலிருந்து 011-22901406 எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் இருப்பு தொகை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அரசின் சேவைகளை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தப்படும் UMANG ஆப்பில் EPFO optionஐ கிளிக் செய்து அதன் மூலம் தொழிலாளர்கள் இருப்பினை தெரிந்து கொள்ள முடியும். மேலும் Unified Portalக்கு பதிலாக http://www.epfindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தொழிலாளர்களின் வைப்பு நிதி பற்றி அறிந்து கொள்ள முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How to check pf balance via sms

Next Story
ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட இது ஏன் பெஸ்ட்? வட்டியை கொட்டும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com