UAN நம்பர் தெரியாவிட்டாலும் பிஎஃப் பேலன்ஸ் ஈசியா பார்க்கலாம்!

UAN நம்பர் இல்லாமல் பிஎஃப் அக்கவுண்ட்டில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

UAN நம்பர் இல்லாமல் பிஎஃப் அக்கவுண்ட்டில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
EPFO Alert Tamil News: Top 5 EPFO Provident Fund account benefits

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஒ) என்பது தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கான அரசால் நிறுவப்பட்ட சேமிப்புத் திட்டமாகும். ஈபிஎஃப் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் ஈபிஎஃப்ஒவால் அறிவிக்கப்படுகிறது, இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சட்டம், 1956 இன் கீழ் ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.

Advertisment

இதன் கீழ் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர்களின் சம்பளத்தில் சிறு தொகையை பிடித்தமாக எடுத்துக்கொள்ளும். மேலும் தொழிலாளர்களிடம் பெறப்பட்ட தொகைக்கு சமமான ஒரு தொகையை அவர்கள் பணிபுரியும் நிறுவனம் வருங்கால வைப்பு நிதி ஆணையத்திடம் நமது பெயரில் செலுத்த வேண்டும். உங்கள் கணக்கில் முறையாக பணம் செலுத்தப்படுகிறதா என்பதை நீங்களே தெரிந்துகொள்ள முடியும். உங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ள முடியும். அதுவும் UAN எனப்படும் பிரத்யேக எண் இல்லாமலேயே தெரிந்துகொள்ள முடியும்

EPFO உறுப்பினர்கள் UAN நம்பரை பயன்படுத்தி தங்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி(EPF) இருப்பை சரிபார்க்கலாம். இருப்பினும், UAN நம்பர் இல்லாமலும் பிஃஎப் பேலன்ஸை தெரிந்துகொள்ள முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-229014016 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்தால் பேலன்ஸ் தொகை எஸ்எம்எஸ் மூலமாக வரும். இதற்கு நீங்கள் UAN எண்ணை வழங்க தேவையில்லை. மற்றொரு ஈசியான வழி..

Advertisment
Advertisements

https://www.epfindia.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.

அதில் சென்று ’click here to know your PF balance’ என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

இப்போது புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதில் உங்களது மாநிலம், பிஎஃப் அலுவலகம், code நம்பர், பிஎஃப் அக்கவுண்ட் நம்பர், பெயர், மொபைல் நம்பர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.

பின்னர், ’I agree' கொடுத்தால் உங்களது பிஎஃப் பேலன்ஸ் விவரங்களை நீங்கள் பார்க்க முடியும்.

உங்களுக்கு UAN நம்பர் தெரிந்தால் இன்னும் சுலபமாக பேலன்ஸ் பார்க்க நான்கு வழிகள் உள்ளன. UMANG, பிஎஃப் ஆன்லைன் போர்ட்டல், எஸ்.எம்.எஸ்., மிஸ்டு கால் ஆகியவற்றின் மூலம் நீங்கள் பார்க்கலாம். பிஎஃப் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து 'EPFOHO UAN' என டைப் செய்து 7738299899 என்ற நம்பருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினாலே போதும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Epfo Epfo Alert Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: