/tamil-ie/media/media_files/uploads/2021/11/epfo-1.jpg)
இந்திய அரசு 2020-21 நிதியாண்டிற்கான PF இன் வட்டியை PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கியுள்ளது. மொத்தம் 21.38 கோடி கணக்குகளுக்கு வட்டிப் பணம் மாற்றப்பட்டுள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை ஒரு ட்வீட் மூலம் இந்த தகவலை EPFO பகிர்ந்துள்ளது. 2020-21 நிதியாண்டில், 21.38 கோடி கணக்குகளுக்கு ஆண்டுக்கு 8.50 சதவீத வட்டி விகிதத்தில் EPFO வட்டித் தொகையை வழங்கியுள்ளது.
இந்தநிலையில், நீங்கள் PF கணக்கு வைத்திருப்பவராக இருந்து, உங்களுக்கு இன்னும் SMS வரவில்லை என்றால், உங்கள் கணக்கில் உங்களுக்கு வட்டி கிடைத்துள்ளதா என்பதை எளிதாகச் சரிபார்க்கலாம்.
உங்கள் PF கணக்குடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால், உங்களுக்கான வட்டியை நீங்கள் எளிதாக சரிபார்க்கலாம். எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் கணக்கில் இருப்பை சரிபார்க்கலாம். இதற்கான எண்ணை EPFO வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பலாம். நீங்கள் SMS அனுப்பியவுடன் EPFO உங்களுக்கு தகவலை அனுப்பும்.
SMS மூலம் தகவலைப் பெற உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து, ’EPFOHO UAN’ என டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். இந்த வசதி ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் கிடைக்கப் பெறும். SMS மூலம் தகவலைப் பெற முதலில் உங்கள் PF UAN எண்ணுடன் பான் எண் மற்றும் ஆதார் எண் இணைக்கப்பட்டிருப்பது அவசியம்.
மிஸ்டு கால் அழைப்பு மூலமும் நீங்கள் PF தகவல்களைப் பெறலாம். இதற்காக EPFO 011 229901406 என்ற பிரத்தியேக எண்ணை வழங்கியுள்ளது. இந்த எண்ணிற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கொடுத்த உடன், உங்களுக்கான தகவல்கள் குறுஞ்செய்தியாக கிடைக்கபெறும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.