பிரதான் மந்திரி கிஷான் திட்டத்தின் பயனாளி விவசாயிகள் 14வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இதற்கான தேதி விரைவில் அரசால் அறிவிக்கப்பட உள்ளது.
முன்னதாக, PM கிசானின் பயனாளிகள் 13வது தவணை பிப்ரவரி 26, 2023 அன்று பெற்றனர். இந்த நிலையில், PM-Kisan Samman Nidhi Yojana திட்டத்தின் கீழ் அடுத்த 14வது தவணை செலுத்துவது ஆதார் மற்றும் NPCI இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
எனவே, உங்கள் கணக்கு ஆதார் மற்றும் NPCI இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எனவே நீங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தைத் தொடர்பு கொண்டு, இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் (IPPB) புதிய (DBT இயக்கப்பட்ட) கணக்கைத் தொடங்க வேண்டும்
இதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அரசின் நிதி உதவியை இழக்க நேரிடும்.
பயனாளி வங்கி கணக்கை செக் பண்ணுவது எப்படி?
1: https://resident.uidai.gov.in/bank-mapper ஐப் பார்வையிடவும்
2: விவரங்களை உள்ளிடவும்
3: NPCI மேப் செய்யப்பட்ட உங்களின் சமீபத்திய வங்கிக் கணக்கு விவரங்கள் காண்பிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“