Tax Saving Investment | நடப்பு நிதியாண்டு முடிவு நெருங்கி வருவதால், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் சரியான வரி சேமிப்பு முதலீடுகளை மார்ச் 31 காலக்கெடுவிற்கு முன்னதாகத் தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது.
இந்த வரி சேமிப்பு முதலீடுகள் பழைய வரி முறையின் கீழ் விலக்கு பெறத் தகுதியுடையது. அந்த வகையில், வரி செலுத்துவோரின் பல்வேறு காரணிகளைக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கும்.
முதலீட்டு வழிகளை மதிப்பீடு செய்தல்
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (இஎல்எஸ்எஸ்), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி) உள்ளிட்ட பல்வேறு வரிச் சேமிப்பு முதலீட்டு விருப்பங்களைப் பற்றி வரி செலுத்துவோர் புரிந்து கொள்ள வேண்டும். இதில் பல்வேறு திட்டங்கள் வரி சேமிப்பு முதலீட்டின் கீழ் வருகின்றன.
ரிஸ்க்-ரிட்டர்ன் பகுப்பாய்வு
வரி செலுத்துவோர் ஒவ்வொரு முதலீட்டு விருப்பத்தின் ஆபத்து மற்றும் வருவாய் சுயவிவரத்தை மதிப்பீடு செய்வது மிகவும் அவசியம் ஆகும்.
பணப்புழக்கக் கட்டுப்பாடுகள்
ஒவ்வொரு முதலீட்டு விருப்பத்துடனும் தொடர்புடைய லாக்-இன் காலங்களை வரி செலுத்துவோர் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, ELSS ஃபண்டுகளுக்கு மூன்று ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது, அதே சமயம் PPF முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
வரி தாக்கங்கள்
முதலீட்டுத் தேர்வுகளுடன் தொடர்புடைய வரி தாக்கங்களைக் கவனியுங்கள். பெரும்பாலான வரி-சேமிப்பு கருவிகளுக்கான பங்களிப்புகள் பிரிவு 80C இன் கீழ் விலக்குகளுக்கு தகுதியுடையவை என்றாலும், வருமானத்தின் வரி விகிதத்தில் வித்தியாசங்கள் காணப்படும்.
கடந்தகால செயல்திறனை மதிப்பாய்வு
பரஸ்பர நிதிகள் போன்ற முதலீட்டு கருவிகளின் கடந்தகால செயல்திறனை மதிப்பீடு செய்யவும்.
போர்ட்ஃபோலியோவின் பல்வகைப்படுத்தல்
பல்வேறு சொத்து வகுப்புகளில் வரி-சேமிப்பு போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்துவது ஆபத்தை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“