இந்தியாவில், வருமான வரிச் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் உங்கள் வருமான வரிக் கணக்கில் வீட்டுக் கடனுக்கு வரி இல்லாமல் விலக்கு பெறலாம். வீட்டுக் கடனுக்கு வரி சலுகை எவ்வாறு பெறுவது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
வீட்டுக் கடன் என்றால் என்ன?
வீட்டுக் கடன் என்பது பெயரில் உள்ளது போல் புது வீடு கட்டுவதற்கு, வாங்குவதற்கு அல்லது மேம்படுத்துவது போன்ற காரணங்களுக்காக வங்கியில் வட்டிக்கு கடன் வாங்குவதாகும்.
தவணைக் காலம், வட்டி விகிதம்
கடன் திரும்ப செலுத்துவதற்கான தவணைக் காலம் நீண்ட காலமாக இருந்தால் மாத இ.எம்.ஐ குறைவாக இருக்கும், ஆனால் வட்டி அதிகமாக இருக்கும். குறுகிய காலத்தில், நீங்கள் அதிக இ.எம்.ஐ செலுத்துகிறீர்கள் என்றால் கடனை விரைவாக அடைக்கலாம். மேலும் வட்டியும் குறைவாக இருக்கும்.
வீட்டுக் கடனில் கிடைக்கும் வரிச் சலுகை என்ன?
வீட்டுக் கடனுக்கான வட்டி, சொந்த நிலமாக இருந்தால் 2 லட்சம் ரூபாய் வரை விலக்கு அளிக்கப்படுகிறது. மார்ச் 31, 2020 வரை 45 லட்சம் மதிப்பிலான குறைவான விலையில் வீடு வாங்கிருந்தால் ரூ.1,50,000 வரை சலுகை வழங்கப்படுகிறது. வருமான வரிச் சட்டப் பிரிவு 80C இன் கீழ் விலக்கு பெற முடியும். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை விலக்கு கோரலாம்.
பிரிவு 24: வீட்டுக் கடன் வரி சலுகை
இந்தப் பிரிவின் கீழ் சொந்த நிலமாக இருந்தால் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை வரி சலுகை பெறலாம். சொந்த நிலம் இல்லை என்றால் சலுகை உச்ச வரம்பு இல்லை. இந்த விலக்கு நீங்கள் வசிக்கும் சொத்துக்கு மட்டுமே கிடைக்கும், உங்களுக்குச் சொந்தமான வேறு எந்தச் சொத்துக்கும் அல்ல.
பிரிவு 80C
இந்தப் பிரிவின் கீழ் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். இந்த விலக்கு நிதியாண்டில் principal repayment செய்தவர்களுக்கு மட்டும் கிடைக்கும்.
இந்த விலக்குகளைப் பெற, உங்கள் வருமான வரிக் கணக்கின் பொருத்தமான பிரிவுகளில் வட்டி மற்றும் அசல் திருப்பிச் செலுத்தும் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கடன் அறிக்கைகள், வட்டி சான்றிதழ்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் அட்டவணை போன்ற தேவையான ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் தகவல் தொழில்நுட்பத் துறை சரிபார்ப்புக்கு அனுப்ப வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil