Advertisment

ஆதார் கார்டு தொலைஞ்சு போய்ருச்சா; கவலைய விடுங்க... ஈசியா ஆன்லைனில் டவுன்லோடு செஞ்சுக்கலாம்

இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தின் (UIDAI ) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து ஆதார் அட்டையை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்

author-image
WebDesk
New Update
aadhaar

இன்றைய காலகட்டத்தில் ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது. அரசு சலுகைகளுக்காக மட்டுமின்றி நிதி சேவைகளுக்கும் ஆதார் அவசியமாக உள்ளது. வங்கி கணக்கு, இன்சூரன்ஸ் பாலிசி போன்ற பலவற்றுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் கார்டை எப்போதும் எடுத்து செல்வது அவசியம். ஆனால் ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் என்ன செய்வது? தற்போது ஆதாரை ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Advertisment

இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தின் (UIDAI ) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து ஆதார் அட்டையை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்

அதில் Get Aadhaar என்ற சேவையில் Download Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்

உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.

உங்கள் ஆதார் எண்ணின் முழு இலக்கங்களைக் காட்ட விரும்பவில்லை என்றால் “முகமூடி ஆதார்” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

CAPTCHA உள்ளீடு செய்து Send OTP என்பதை கிளிக் செய்யவும்

பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்கள் OTP ஐப் பெறுவீர்கள். OTP ஐ உள்ளிடவும்.

உங்கள் ஆதார் அட்டையைப் பதிவிறக்க "Verify and Download" என்பதைக் கிளிக் செய்க

Enrolment ID, Virtual ID மூலமாகவும் ஆதாரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aadhaar Card Uidai Aadhaar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment