இன்னும் ஒரு வாரத்திற்குள் (பிப்.1), நரேந்திர மோடி அரசாங்கம் தனது கடைசி முழு மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2023 அன்று தாக்கல் செய்ய உள்ளது.
இந்த நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஹல்வா கிண்டும் விழாவில் வியாழக்கிழமை (ஜன.26) கலந்துகொண்டார். அப்போது,நிர்மலா சீதாராமன் “பச்சை நிற பார்டர் கொண்ட மெல்லிய மஞ்சள் நிற புடவை உடுத்தி இருந்தார்.
இந்த வழக்கம் பல தசாப்தங்களாக பட்ஜெட் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
ஹல்வா கிண்டும் நிகழ்வக்கு பிறகு என்ன நடக்கும்?
ஹல்வா கிண்டும் நிகழ்வு ஒரு சடங்கு சம்பிரதாயம் அல்ல. இந்நிகழ்வுக்கு பிறகு இன்று முதல் பட்ஜெட் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் நார்த் பிளாக்கில் தங்குவார்கள்.
முக்கியமான தகவல்களின் தேவையற்ற கசிவைத் தவிர்க்க, மத்திய பட்ஜெட்டின் ரகசியம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இது செய்யப்படுகிறது.
லாக்-இன் காலம் எப்போது முடிவடையும்?
சீதாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தருணத்தில், லாக்-இன் காலம் முடிவடையும்.
காகிதமற்ற பட்ஜெட், ஆன்லைனில் கிடைக்குமா?
நாடாளுமன்றத்தில் சீதாராமனின் உரை முடிந்தவுடன், மத்திய பட்ஜெட் விரைவில் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று மோடி அரசு கூறியுள்ளது.
எனவே பட்ஜெட் ஆவணங்களை எவ்வாறு பதிவிறக்குவது?
அனைத்து பட்ஜெட் ஆவணங்களும் நிகழ்நேரத் தகவலுடன் பதிவேற்றம் செய்யப்படுவதால் அவற்றைச் சரிபார்க்க ஒருவர் ‘யூனியன் பட்ஜெட் மொபைல் செயலி’யை பதிவிறக்கலாம்.
இந்த செயலியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் தகவல்கள் இருக்கும் மற்றும் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு கிடைக்கும்.
இந்த செயலியை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணைய போர்ட்டலில் (http://www.indiabudget.gov.in.) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில், பட்ஜெட் உரை முடிந்ததும் அனைத்து ஆவணங்களும் ஆன்லைனில் பதிவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil