இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவி வருகிறது. கடந்த மாதங்களில் தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் அதிகமாக பதிவானது. தொற்று நோயை எதிர்த்து போராட மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியா 17 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. இதுவரை 17,01,76,603 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு அதற்கான சான்றிதழை வைத்திருப்பது முக்கியம். ஏனெனில் வரும் மாதங்களில் பல விஷயங்களுக்கு தேவைப்படலாம். முதல் டோஸ் போட்டுக்கொண்ட உடனேயே சான்றிதழ் தரப்படுகிறது. அதில் பெயர், வயது, பாலினம் மற்றும் தடுப்பூசி குறித்த விவரங்கள் இடம்பெற்றிருக்கும். தடுப்பூசி விவரங்களின் கீழ், தடுப்பூசி பெயர், முதல் டோஸ் பெற்ற தேதி, நபர் தடுப்பூசி போட்ட இடம், யாரால் வழங்கப்பட்டது போன்றவை இருக்கும். இதனால் தடுப்பூசி போட்டவுடன், சான்றிதழ்களை டவுன்லோடு செய்யுங்கள். CoWIN வலைத்தளம் அல்லது கோவின் ஆப் மற்றும் ஆரோக்கிய சேது ஆப் வழியாக எப்படி டவுன்லோடு செய்ய வேண்டும் என்பதற்கான எளிமையான வழிகாட்டுதல்கள்.
கோவின்(CoWIN) தளத்திலிருந்து எப்படி பதிவிறக்கம் செய்வது?
- கோவின் அதிகாரப்பூர்வ Website ஆன https://www.cowin.gov.in/ செல்லவும்.
- Sign In/Register பட்டனை-ஐ கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி அந்த எண்ணிற்கு வரும் OTP-ஐ பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
- நீங்கள் உள்நுழைந்ததும், உங்கள் பெயரின் கீழ் சான்றிதழ் டேப் (Certificate tab) இருக்கும்.
- உங்கள் தடுப்பூசி சான்றிதழின் Soft copy-ஐ பெற இப்போது டவுன்லோடு பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
ஆரோக்கிய சேது ஆப்பில் இருந்து தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?
- முதலில் ஆண்ட்ராய்டின் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ios-ன் ஆப் ஸ்டோரிலிருந்து ஆரோக்கிய சேது appஐ டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
- பிறகு app-ஐ ஓபன் செய்து மொபைல் எண்ணை பயன்படுத்தி உள்நுழைந்து மேலே உள்ள கோவின்(CoWin) tab-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
- தடுப்பூசி சான்றிதழ் விருப்பத்தை(Vaccination Certificate option) க்ளிக் செய்த பின் உங்கள் 13 இலக்க user குறிப்பு ஐடியை(Beneficiary reference ID)-ஐ Enter செய்ய வேண்டும்.
- இப்போது உங்கள் தடுப்பூசி சான்றிதழை பெற Download பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.