How to download e-Pan for Free: இ-பான் கார்டை எப்படி டவுன்லோடு செய்வது?

இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்ய, விண்ணப்பதாரர்களுக்கு OTP உடன் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஐடிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும்.

Pan card download: UIDAI-ன் பான் கார்டின் சாஃப்ட் மற்றும் கார்டு காப்பியை மக்கள் வைத்துக் கொள்ள தற்போது, வருமான வரித்துறை அனுமதியளித்துள்ளது. மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) பிறப்பித்துள்ள  உத்தரவின்படி, இ-பான் (மின்னணு முறையில் வழங்கப்பட்ட பான் கார்டு) மற்றும் நார்மல் பான் கார்டு இரண்டுமே சமமான ஆவணமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

தற்போது, என்.எஸ்.டி.எல்-டின் (நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்) மற்றும் யு.டி.ஐ-ஐ.டி.எஸ்.எல் (யு.டி.ஐ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெக்னாலஜி அண்ட் சர்வீசஸ் லிமிடெட்) ஆகிய இரண்டு ஏஜென்சிகளும் பான் கார்டுகளை வழங்கும் ஏஜென்ன்சிகளாக வருமான வரித் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஏஜென்சிகளின் வலைதளத்திலிருந்தும் பான் கார்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

புதிய பான் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது இ-பான் கார்டை இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள், மற்றவர்கள் நாமினேஷன் தொகையாக ரூ.8.26 செலுத்த வேண்டும்.

How to Download e-Pan: இ-பான் கார்டை எப்படி டவுன்லோடு செய்வது?

புதிய பான் கார்டை பெற விண்ணப்பித்தவர்கள் அல்லது UTI-ITSL மூலம் தங்கள் பான் அட்டை விவரங்களில் மாற்றம் செய்தவர்கள் அனைவருமே தங்களது பான் எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி இ-பான் கார்டின் PDF-ஐ பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

கடைசி ஒரு மாதத்திற்குள் புதிதாக பான் கார்டு பெற அப்ளை செய்தவர்கள் அல்லது தங்களது விபரங்களில் ஏதேனும் மாற்றம் செய்தவர்கள், இ-பான் கார்டை PDF வடிவத்தில் பெற கட்டணமே இல்லை. முற்றிலும் இலவசமாக அவர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்ய, விண்ணப்பதாரர்களுக்கு OTP உடன் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஐடிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். ஒரு மாத காலத்திற்குள் மூன்று முறை மட்டுமே இதனை பயன்படுத்த முடியும்.

How to download e-PAN from NSDL-TIN

மேலே குறிப்பிட்டுள்ளபடி, என்.எஸ்.டி.எல்லும் கடந்த 30 நாட்களில் பான் கார்டுக்கு அப்ளை செய்தவர்களை, தங்களது வலைத்தளத்திலிருந்து இலவசமாக இ-பான் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது. புதிய பான் விண்ணப்பதாரர்கள் இ-பானைபதிவிறக்கம் செய்ய, பான் அட்டை விண்ணப்பத்தின் ஒப்புதல் எண் அவசியம்.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close