Advertisment

தொலைந்து போன பான் கார்டை மீண்டும் பெறுவது எளிமையானது; ஸ்டெப்-பை- ஸ்டெப் வழிமுறைகள் இங்கே!

Download e-PAN: ஆன்லைனில் 5 நிமிடத்தில் பான் கார்டு பெறும் வசதியை வருமானவரித்துறை உருவாக்கியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pan card apply online charges

வருமான வரி செலுத்துவது, வங்கி பரிவர்த்தனைகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பெறுவதற்கு போன்ற பல விஷயங்களுக்கு பான் கார்டு மிக முக்கிய ஆவணமாக இருக்கிறது. 10 இலக்கில் உள்ள எண் கொண்ட இந்த பிளாஸ்டிக் பான் கார்ட்டை ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுத்த முடியும். இப்படி பல்வேறு வகையில் உதவும் பான் கார்டை தொலைத்துவிட்டால் அடுத்து என்ன செய்வது? . புதிய பான் கார்டின் அவசர தேவைக்காக உடனடியாக பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

Advertisment

வருமானவரித்துறை புதிதாக ஒரு வசதியை உருவாக்கியுள்ளது. இனி பான் கார்டு தேவைப்படுவோருக்கு இ-பான் கார்டு வழங்கப்படுகிறது. இ-பான் என்பது வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட டிஜிட்டல் பான் அட்டை ஆகும்.

இ-பான் பெறுவது எப்படி?

https://www.incometax.gov.in/iec/foportal என்ற வருமானவரித்துறை இணையதளத்தில் லாகின் செய்யவும்

‘Instant e-PAN’ என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்

அடுத்ததாக ‘New e-PAN’ என்பதை கிளிக் செய்யவும்

தற்போது பான் எண்ணை பதிவிடவும்

பான் எண் மறந்துவிட்டால், ஆதார் எண்னை பதிவிடவும்

விதிமுறைகளை படித்து பார்த்து ‘Accept’ கொடுக்கவும்

தற்போது உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP நம்பரை என்டர் செய்யவும்

விவரங்களை படித்து பார்த்து ‘Confirm’ கொடுக்கவும்

விண்ணப்பதாரரின் இமெயில் ஐடிக்கு இ-பான் கார்டு PDF Formatல் அனுப்பப்படும்

இப்போது இ-பான் கார்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

உடனடியாக பான் கார்டு பெறுவதற்கு கட்டணங்கள் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆதார் எண் இருந்தால் மட்டும் போதும் பான் கார்டு பெற்றுவிடலாம். இந்த பான் கார்டினை tin – NSDL அல்லது UTIITSL போன்ற இணைய தளங்களிலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆதார் மற்றும் பான் எண் இணைக்க செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pan Card Income Tax Department Instant Pancard
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment