ரேஷன் கார்டு காணாமல் போய்விட்டதா? சிம்பிளாக ஆன்லைனில் டவுன்லோட் செய்யும் முறை

How to download ration card from online simple steps: உங்களது ரேசன் கார்டு தொலைந்து விட்டால் அதை எளிதில் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களை நீக்குதல் அல்லது சேர்த்தல் ஆகியவற்றையும் ஆன்லைன் மூலம் நீங்களே செய்யலாம்

Which category ration cards are eligible for getting rs 1000, குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய், குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய், தமிழ்நாடு அரசு, who are eligible for rs 1000 for married women, tamil nadu, dmk, mk stalin, rs 1000 for married women

உங்களது ரேஷன் கார்டு நகலை பதிவிறக்கம் செய்தல், ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை மாற்றுதல் உள்ளிட்ட செய்முறைகளை இப்போது எளிதாக ஆன்லைன் மூலம் நாமே செய்து கொள்ளலாம். அது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு மற்றும் நுகர்வோர் விநியோகத் துறையால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் ஒரு மிக முக்கிய ஆவணம் குடும்ப அட்டை அல்லது ரேஷன் கார்டு.  நாட்டின் குடிமக்களுக்கு மானிய விலையில் உணவு மற்றும் இதர பொருட்களை ரேசன் கடைகள் மூலம் வழங்க இந்த குடும்ப அட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, ரேஷன் கார்டு நாடு முழுவதும் முக்கிய அடையாள சான்றாகவும் உள்ளது.

ஒருவேளை உங்களது ரேசன் கார்டு தொலைந்து விட்டால் அதை எளிதில் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதேபோல், ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை மாற்றுதல் அல்லது புதுப்பித்தலையும் எளிமையான முறையில் செய்யலாம். மேலும், ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களை நீக்குதல் அல்லது சேர்த்தல் ஆகியவற்றையும் ஆன்லைன் மூலம் நீங்களே செய்யலாம்.

இப்போது உங்கள் தொலைந்து போன ரேஷன் கார்டைப் பெற நீங்கள் அரசு அலுவலகத்திற்குச் செல்லத் தேவையில்லை. அதேபோல், புதிய ரேஷன் கார்டை பெற, நீங்கள் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்கலாம். அதன் ஒப்புதலுக்காக மட்டுமே நீங்கள் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டி வரும். இந்த செயல்முறைகளைச் செய்ய தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று, கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ரேஷன் கார்டைப் பெறலாம். 

ரேஷன் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

உங்கள் ரேஷன் கார்டை பதிவிறக்கம் செய்ய TNPDS (Tamil Nadu Public Distribution Service) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.

உங்கள் TNPDS கணக்கில் உள் நுழைய வேண்டும். இப்போது உங்களுக்கு நீங்கள் பதிவு செய்துள்ள தொலைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் ஒடிபி வரும். அதனைக் கொண்டு உங்கள் சுயவிவர பக்கத்திற்கு உள்நுழைய வேண்டும்.

உங்கள் சுயவிவர பக்கத்திற்கு சென்ற பிறகு, நீங்கள் TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான டாப்-ஐயும் காணலாம்.

இப்போது நீங்கள் விரும்பிய மொழியைத் தேர்ந்தெடுத்து அச்சிடு (Print) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர்  PDF ஃபைலை சேமிக்க சேமி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து நீங்கள் பதிவிறக்கம் செய்த ஸ்மார்ட் ரேஷன் கார்டின் நகலை  எடுத்துக் கொண்டு, உங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டைப் பெறலாம்.

இதேபோல் ரேசன் கார்டில் உங்கள் விவரங்களை மாற்றுதல், உறுப்பினர்களை நீக்குதல் அல்லது சேர்த்தல் போன்ற செயல்பாடுகளையும் செய்யலாம்.

மேலும் இது தொடர்பான உதவி மற்றும் தகவல்களுக்கு 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய ஹெல்ப்லைன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How to download ration card from online simple steps

Next Story
ITR Filing: Form 16 வாங்கிட்டீங்களா? இதை முக்கியமா கவனிங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com