உங்களது காலி இடம் மூலம் உங்களுக்கு வருமானம் வேண்டுமா? கட்டாயம் நீங்கள் இந்த தகவலை தெரிந்துக் கொள்ளுங்கள். தற்போது பயன்படுத்தப்படாத ஒரு காலி இடம் இருந்தால், அதை SBI ATM க்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம். எஸ்பிஐ ஏடிஎம் -க்கு உங்கள் கடை அல்லது இடத்தை வாடகைக்கு விடுவது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கே.
எஸ்பிஐ ஏன் ஏடிஎம்களுக்கு வாடகை இடங்களை தேர்வு செய்கிறது?
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இப்போது நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஏடிஎம்களைத் திறந்துள்ளது. தற்போது ஏடிஎம்கள் வங்கிகளுடன் இணைந்திருப்பது மட்டுமல்லாமல், வங்கி அல்லாத மக்கள் அதிகம் கூடக் கூடிய, அல்லது மக்கள் எளிதாக அணுக கூடிய இடங்களிலும் நிறுவப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு நாளும் புதிய ஏடிஎம்களைத் திறக்க வங்கி தனியார் இடங்களை வாடகைக்கு எடுத்து வருகிறது. ஏடிஎம் -க்கு உங்கள் நிலத்தை எஸ்பிஐ -க்கு வாடகைக்கு கொடுப்பதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம்.
ATM க்கு உங்கள் கடையை எப்படி வாடகைக்கு கொடுப்பது?
ஏடிஎம் -க்கு உங்கள் நிலம் அல்லது கடையை வாடகைக்கு கொடுக்க விரும்பினால், நீங்கள் முதலில் உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ள வேண்டும். உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள RBO வில் ATM க்கு உங்கள் நிலத்தை வாடகைக்கு கொடுப்பதற்கான விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் உங்கள் பிராந்தியத்தின் RBO ஐ https://bank.sbi/portal/web/home/branch-locator இல் காணலாம் மற்றும் அதை அருகிலுள்ள எஸ்பிஐ கிளையிலிருந்தும் பெறலாம்.
அடுத்து, உங்களிடம் ஏடிஎம் நிறுவ போதுமான நிலம் இருப்பதை உறுதி செய்யவும். இது ஒரு ஏடிஎம் -ஐ எளிதில் பொருத்தக்கூடிய ஒரு கடையாக இருக்கலாம். இருப்பினும், கடை சராசரி ஏடிஎம் -ஐ விட பெரியதாக இருக்க வேண்டும்.
உங்கள் வங்கியை நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் இதைச் செய்ய விரும்பவில்லை என்றால், பல ஏஜென்சிகளைத் தொடர்புகொண்டு ஏடிஎம் -க்கு உங்கள் நிலத்தை வாடகைக்கு கொடுக்க நீங்கள் தேர்வு செய்யலாம்.
இதில் முத்தூட் ஏடிஎம், இந்தியா ஒன் ஏடிஎம் மற்றும் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றின் இணையதள பக்கங்களுக்குச் சென்று அதற்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
ATM க்கு உங்கள் நிலம் அல்லது கடையை வாடகைக்கு கொடுப்பதன் மூலம் நீங்கள் எவ்வாறு சம்பாதிக்கிறீர்கள்?
ஏடிஎம் -க்கு நீங்கள் நிலத்தை வாடகைக்கு கொடுத்து சம்பாதிக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று மாதாந்திர வாடகை பெறுவதன் மூலம். இரண்டு அந்த ஏடிஎம் -ல் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் பெறுவதன் மூலம். மாதாந்திர வாடகை நீங்கள் வாடகைக்கு இருக்கும் சொத்தின் இடம் மற்றும் அளவைப் பொறுத்தது. இதேப்போல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கேற்ப, உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். இந்த பரிவர்த்தனைகள் மூலம் வருமானம் கிடைக்க நீங்கள் ஏடிஎம் இயந்திரத்திற்கு வைப்புத் தொகை செலுத்தி இயந்திரத்தை நிறுவ வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil