நீங்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து, ஓய்வூதிய பலன் கிடையாது என்கிற பட்சத்தில், தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS)ஓய்வுகால முதலீட்டிற்கு சிறந்த விருப்பமாக அமைந்திடும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், ஒவ்வொரு மாதமும் பெரிய தொகை ஓய்வூதியமாக கிடைப்பதற்கான வழியை மேற்கொள்ள முடியும். இந்த திட்டம் குறித்து விரிவாக இச்செய்திதொகுப்பில் காணலாம்.
பணியில் சேர்ந்ததும் முதலீடு செய்வது அவசியம்
ஓய்வூதிய வாழ்க்கைக்கான திட்டமிடலை, முதல் வேலைக்கு நீங்கள் சேர்ந்த நேரத்திலிருந்தே தொடங்க வேண்டும். அப்போதுதான், ஓய்வூதியக் காலத்தில் அதிகப்பட்ச ஓய்வு தொகையை பெற முடியும். உதாரணமாக, நீங்கள் 21 வயதில் 4,500 ரூபாய் முதலீடு செய்ய தொடங்கி, 60 வயது வரை தொடரும் பட்சத்தில், 39 ஆண்டுகள் முதலீடு செய்கிறீர்கள்.
அதாவது, ஆண்டிற்கு 54 ஆயிரம் ரூபாயை, 39 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால், மொத்த முதலீட்டு தொகை 21 லட்சத்து 6 ஆயிரம் ஆகும். PS இல் சராசரியாக 10% வருமானம் கொடுக்கப்பட்டால், முதிர்ச்சியின் போது, உங்களுக்கு கிடைக்கும் மொத்த தொகை ரூ 2கோடியே 59 லட்சம் ஆகும். அதன்படி, உங்களுக்கு 60 வயது எட்டிய பிறகு, மாதந்தோறும் 51 ஆயிரத்து 848 ரூபாய் பென்ஷன் தொகையாக கிடைத்திடும்.
இந்த கணக்கீடு ஒரு உத்தேச மதிப்பீடு தான். தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) சராசரியாக 8 முதல் 12% வருமானம் கிடைக்கிறது.
ஆண்டுதோகை எவ்வளவு எடுக்கலாம்?
தேசிய ஓய்வூதிய அமைப்பில், நீங்கள் 40% ஆண்டுத் தொகையை எடுத்துக் கொண்டால், வருடாந்திர விகிதம் 6% ஆக இருந்தால், ஓய்வுக்குப் பிறகு உங்களுக்கு மொத்தமாக ரூ1.56 கோடி கிடைத்திடும். . மீதமுள்ள ரூ.1.04 கோடி ஆண்டுத் தொகையாகச் சென்றுவிடும். அந்த தொகையிலிருந்து, மாதந்தோறும் பென்ஷன் தொகை வழங்கப்படும். ஆண்டுத் தொகை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக ஓய்வூதியமும் கிடைத்திடும்.
NPS கணக்கு திறப்பது எப்படி?
- முதலில் Enps.nsdl.com/eNPS அல்லது Nps.karvy.com செல்ல வேண்டும்.
- அதில், New Registration கிளிக் செய்து, உங்கள் தாயார் பெயர் உட்பட கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும்.
- பின்னர், மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிட வேண்டும்.
- அடுத்து, உங்கள் வங்கி கணக்கு விவரங்களை சேர்க்க வேண்டும்.
- உங்கள் போர்ட்ஃபோலியோ, நிதியை தேர்ந்தெடுத்து, கேட்கும் விவரங்களை நிரப்ப வேண்டும்.
- தொடர்ந்து, உங்கள் போட்டோ, கையொழப்பம், பணம் விவரம் பூர்த்து செய்து, ரத்து செய்த காசோலையை பதிவிட வேண்டும்.
- இதற்குப் பிறகு, நீங்கள் விரும்பும் அளவுக்கு NPS இல் முதலீடு செய்யுங்கள்.
- பணம் செலுத்திய பிறகு, உங்களின் நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் உருவாக்கப்படும். பணம் செலுத்திய ரசீதும் கிடைக்கும்.
- முதலீடு செய்த பிறகு, e-sign/print registration பேஜ் செல்ல வேண்டும். இதில், பான் மற்றும் நெட்பேங்கிங் மூலம் பதிவு செய்யலாம். இதில், உங்கள் KYC பணிகள் முடிவடைந்துவிடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil