EPFO higher pension calculation of dues : ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உயர் ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்கள் அல்லது கூட்டு விண்ணப்பங்களைச் செயலாக்குவதற்கான நிலுவைத் தொகையை எவ்வாறு கணக்கிடும் என்ற விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அதிக ஓய்வூதியத்திற்காக, தகுதியான உறுப்பினர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகை ஓய்வூதிய நிதிக்கு மாற்றப்படும்.
நிலுவைத் தொகை கணக்கீடும் முறை
அதிக ஊதியத்தில் முதலாளியின் பங்கில் 8.33% ஆகும். மேலும், மாதம் ரூ. 15,000க்கு மேல் அதிக ஊதியத்தில் முதலாளி பங்கு அதிகரித்த பங்களிப்புக்கான பதிவுகளின்படி கணக்கிடப்படும்.
மேலே கணக்கிடப்பட்ட நிலுவைத் தொகையில் வசூலிக்கப்படும் வட்டியானது, உறுப்பினர்கள் தங்கள் PF திரட்சியின் மீது சம்பாதித்த வட்டியாக இருக்கும்.
தொடர்ந்து, விலக்கு அளிக்கப்படாத நிறுவனங்களுக்கு, EPF திட்டம் 1952ன் பாரா 60ன் கீழ் அறிவிக்கப்பட்ட விகிதத்தில் வட்டி கணக்கிடப்படும்.
மேலும், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, EPF திட்டம், 1952 இன் பாரா 60 இன் கீழ் அறிவிக்கப்பட்ட விகிதத்தில் கணக்கிடப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“