ITR filing | 2024 ஜூலை 31, 2024 அன்று இரவு 7 மணி வரை ஏழு கோடிக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குகள் (ITR) தாக்கல் செய்துள்ளனர். இன்னும் பலர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை.
சரியான நேரத்தில் தாக்கல் செய்யத் தவறிய வரி செலுத்துவோர், ஜூலை 31 காலக்கெடுவுக்கு பின்னர் தாமதமாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்.
தாமதமான வரித்தாக்கல் என்றால் என்ன?
வருமான வரி சட்டத்தின் பிரிவு 139(4) இன் கீழ் தாமதமான வருமானம் என்பது காலக்கெடு முடிந்த பிறகு தாக்கல் செய்யப்படும் ரிட்டர்ன் ஆகும். ஜூலை 31 அல்லது அதற்கு முன் ரிட்டன் தாக்கல் செய்யத் தவறிய வரி செலுத்துவோர் தாமதமான ரிட்டனைத் தாக்கல் செய்யலாம்.
இவர்கள், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மக்கள் தாமதமான வருமானத்தை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
அபராதம்
ஜூலை 31க்கு மேல் வருமான வரிக் கணக்கை தாமதமாக தாக்கல் செய்தால் ₹5,000 அபராதம் விதிக்கப்படும். ₹5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள சிறு வரி செலுத்துவோர், காலக்கெடுவுக்குப் பிறகு வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது ₹1,000 அபராதம் விதிக்கப்படும்.
வரி விலக்கு இழப்பு
வரி செலுத்துவோர் ஜூலை 31 க்குப் பிறகு வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யும் போது, பழைய வரி முறையின் கீழ் வழங்கப்பட்ட விலக்குகள் கிடைக்காது.
மூலதன இழப்பு
வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டால், மூலதன இழப்பை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு முன்னோக்கிச் செல்ல உங்களுக்கு அனுமதி இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“